ஹாலில் சில்மிஷம்.. கிச்சனிலும் துரத்திய பக்கத்து வீட்டுக்காரர்.. தோசை கரண்டியை கையிலெடுத்த பெண்.. செம
மும்பை: நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.. தமிழகம் உட்பட வடமாநிலங்கள் வரை தினந்தோறும் பெண்கள் மீதான பாலியல் அக்கிரமங்கள் பெருகி கொண்டே வருவது, கலக்கத்தை தந்து வருகிறது.
உலகம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தபடியே வருகின்றன.. இதில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது.
இன்னல்கள்: பாலியல் இன்னலுக்குள் ஏராளமான பெண் குழந்தைகள் சிக்கி வருவதுடன், பாலியல் தொடர்பான குற்றங்களும் அதிகரித்தபடியே வருகின்றன. இதை தடுக்க ஒவ்வொரு நாடுகளிலும், ஒவ்வொரு விழிப்புணர்வுகளும், சட்டதிட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. எனினும், போதுமான தீர்வு கிடைக்கவில்லை.

கொல்கத்தா சம்பவத்தால் நாடே கொந்தளித்து கிடக்கிறது. இன்னும் இதற்கு முடிவும் விடையும் கிடைக்கவில்லை. அதற்குள் தஞ்சாவூர் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம், கடும் அதிர்ச்சியை தந்துவிட்டது. 23 வயது பெண்ணை 4 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.. இதில் 17 வயது மாணவனும் அடக்கம்.
பட்டுக்கோட்டை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை, அவரது உறவினர்கள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, திருப்பி அனுப்பிய கொடுமையும் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் பெங்களூரில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. மும்பையை சேர்ந்த 21 வயது இளம்பெண், பெங்களூரில் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.
நண்பர்கள்: சம்பவத்தன்று இரவு கோரமங்களாவில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தார்.. விடிகாலை 1:30 மணிக்கு வீட்டுக்கு காரில் திரும்பும்போது, சாலை ஓரத்தில் நின்றிருந்த 3 ஆட்டோக்கள் மீது மோதிவிட்டார். போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ? என்று பயந்துகொண்டு, காரில் இருந்து இறங்கி, சாலையின் மறுபக்கம் சென்று, அந்த வழியாக பைக்கில் வந்தவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
பைக்கில் ஏறும் முன்பு, இளம்பெண்களுக்கான பாதுகாப்பு செயலியை ஆன் செய்து, தன்னுடைய நண்பர்கள், அப்பாவுக்கு தகவல் அனுப்பினார் இளம்பெண்.
லிப்ட் நபர்: "லிப்ட்" தந்தவர், ஆள் நடமாட்டம் இல்லாத ஹெப்பகோடி பகுதிக்கு பெண்ணை அழைத்து சென்று, அங்கிருந்த ஷெட் ஒன்றில் தள்ளி, ஆடைகளை கிழித்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.. அதற்குள் பெண்ணின் மொபைல் போனை 'டிராக்' செய்த போலீசார், ஷெட் இருக்கும் பகுதிக்கு வந்துவிட்டனர். உடனே லிப்ட் தந்த இளைஞர் பைக்குடன் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
மும்பையில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள பிவண்டி பகுதியில் 26 வயதுமிக்க இளம்பெண்ணின் வசித்து வருகிறார்.. இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில், அனில் சத்தியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார்... சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென பக்கத்து வீட்டுக்காரர் மதுபோதையில், பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டார்..
பாலியல் வன்முறை: பெண்ணிடம் பாலியல் வன்முறையிலும் ஈடுபட முயன்றிருக்கிறார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தபெண், இளைஞரிடமிருந்து தப்பித்து கிச்சனுக்கு ஓடியிருக்கிறார்.. ஆனால், பக்கத்துவீட்டுக்காரர், விடாமல் கிச்சனுக்கும் துரத்திக் கொண்டே ஓடினார்..
அந்த பெண்ணின் முன்பு நின்று கொண்டு, தன்னுடைய அந்தரங்க உறுப்பைக் காட்டி இழிவான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆவேசமடைந்த பெண், கிச்சினிலிருந்த தோசைக் கரண்டியை எடுத்து இளைஞரின் அந்தரங்க உறுப்பில் தாக்கினார்.. இதில் இளைஞருக்கு படுகாயம் ஏற்பட்டது....
மருத்துவமனை: இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த இளைஞர், கிச்சனிலிருந்து, மருத்துவமனை வரை வேகமாக ஓடினார்.. மருத்துவமனையில் இளைஞருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதனிடையே, இளம்பெண் போலீசில் புகார் தந்திருக்கிறார்.. இதையடுத்து, இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் போக்சோ சட்டம் அமலில் உள்ளது.. இதன்மூலம் குற்றங்கள் ஓரளவு குறைகிறது என்றாலும், முழுமையாக பெண் குழந்தைகளை காப்பாற்ற முடிவதில்லை.. போக்சோ சட்டப்படி தரப்படும் குற்றங்களும், கடுமையாக இல்லை என்றே தெரிகிறது.. எனவே, போக்சோ தண்டனையை கடுமையாக்கப்பட வேண்டியிருக்கிறது.. அதேபோல, பெண்களின் பணியிடங்களில் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications