Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறை உங்களை மொத்தமாக மாற்றிவிடும்! பீமா கோரேகான் வழக்கில் ஜாமீனில் விடுதலையான சுதா, உருக்கமான பேட்டி

Subscribe to Oneindia Tamil

மும்பை: பீமா கோரேகான் வழக்கில் கைதாகி தற்போது பெயிலில் விடுதலை செய்யப்பட்டு இருக்கும் சுதா பரத்வாஜ் சிறையில் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். பிபிசி ஆன்லைன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கஷ்டங்கள் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள பீமா கோரேகானில் தலித் மக்கள் சார்பாக வருடா வருடம் நடத்தப்படும் அஞ்சலி ஊர்வலம் மிகவும் பிரபலமானது. 1817ம் ஆண்டு பிராமணிய பேஷ்வா ராணுவத்திற்கும் கிழக்கிந்தியக் கம்பெனி படைகளுக்கும் இடையிலான சண்டையில் பட்டியல் இன மக்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் பலியான 44 தலித் மக்களுக்கு அஞ்சலி செலுத்த எல்லா வருடமும் மகாராஷ்டிராவில் பட்டியல் இன மக்கள் பேரணி செல்வது வழக்கம்.

இதுதான் பீமா கோரேகான் பேரணி. கடந்த 2018ம் வருடம் இந்த போரின் 200ம் ஆண்டு நினைவு பேரணி நடத்தப்பட்டது. அமைதியாக நடந்த போராட்டத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பெரிய கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். கடைகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டது.

பீமா கோரேகான் 16 பேர் கைது

பீமா கோரேகான் 16 பேர் கைது

இந்த வன்முறையை தூண்டியதாக 16 சமூக போராளிகள், வழக்கறிஞர்கள், அரசியல் வல்லுநர்கள், இடதுசாரிகள் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடியை கொலை செய்ய இவர்கள் சதித்திட்டம் தீட்டியதாகவும் புகார் உள்ளது. பீமா கோரேகான் பேரணிக்கு முதல்நாள் இவர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக புகார் உள்ளது. வெர்னோன் கன்சால்வஸ், ஆனந்த் டெல்டும்ப்டே, சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி உள்ளிட்டோர் இதில் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டான் சுவாமி

ஸ்டான் சுவாமி

இதில் பலருக்கு இத்தனை வருடமாக பெயில் கிடைக்கமால் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த வருடம்தான் பெயில் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டான் சுவாமி மரணம் அடைந்தார். சிறையில் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணம் அடைந்தார். இதே வழக்கில் 2018 அக்டோபர் 28ம் தேதி கைது செய்யப்பட்டவர்தான் சுதா பரத்வாஜ். பிரதமர் மோடிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ். அதன்பின் 3 வருடமாக சிறையிலேயே இருந்தார்.

சுதா பரத்வாஜ்

சுதா பரத்வாஜ்

இரண்டு சிறைகள் மாற்றப்பட்டு, 3 முறை பெயில் மறுக்கப்பட்டு கடைசியில் சில நாட்களுக்கு முன் இவருக்கு பெயில் வழங்கப்பட்டது. மும்பையிலேயே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் இவருக்கு பெயில் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து எதுவும் பேச கூடாது என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுதா பரத்வாஜிடம் பிபிசி ஊடகம் பேட்டி எடுத்துள்ளது. கடந்த 3 வருடமாக தான் எதிர்கொண்ட வலி மிகுந்த சிறை வாழ்க்கை குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார்.

சுதா பரத்வாஜ் சிறை வாழ்க்கை

சுதா பரத்வாஜ் சிறை வாழ்க்கை

தான் அனுபவித்த கஷ்டங்களை விட இந்தியாவில் சிறை வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பதை அவர் தனது பேட்டியில் விவரித்து இருக்கிறார். நான் இப்போது சிறிய சிறையில் இருந்து பெரிய சிறைக்கு வந்துவிட்டேன்.. மும்பைதான் அந்த பெரிய சிறை. என்னால் மும்பையை விட்டு எங்கும் வெளியே செல்ல முடியாது. நான் டெல்லியில் வேலை பார்த்து வந்தேன். இனி புதிய வேலையை மும்பையில் பெற வேண்டும். எனது குடும்பத்தினரை கூட நான் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சுதா தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சுதா பரத்வாஜ் யார்?

சுதா பரத்வாஜ் யார்?

அமெரிக்காவில் பிறந்த இவர் அந்த நாட்டு குடியுரிமையை உதறிவிட்டு இந்தியாவிற்கு வந்தார். இங்கு கணிதம் படித்தவர். பின்னர் சட்டம் முடித்து பூர்வகுடி மக்களுக்காக பல மாநிலங்களில் போராடினார். முக்கியமாக சட்டீஸ்கரில் பூர்வகுடி மக்களுக்காக போராடிய சுதா, அங்கு கனிமங்கள் முறைகேடாக எடுக்கப்படுவது, ஆதிவாசிகள் முடக்கப்படுவதற்கு எதிராக போராடினார். ஆனால் அந்த போராட்டங்களை விட சிறையில் தான் பார்த்த அனுபவங்கள்தான் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது என்று சுதா தெரிவித்துள்ளார்.

சிறை வாழ்க்கை கொடுமை

சிறை வாழ்க்கை கொடுமை

இந்த சிறை உங்களை மொத்தமாக மாற்றிவிடும்.. உள்ளே நுழைந்த அடுத்த நொடி உங்கள் வாழ்க்கை மாறிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். புனேவில் இருக்கும் உயர் பாதுகாப்பு கொண்ட ஏர்வாடா மத்திய சிறையில்தான் சுதா முதலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். பெரிய குற்றங்களை செய்தவர்களை அடைக்கும் சிறை ஆகும் இது. இந்த சிறையில் சப்பாத்தி, பருப்பு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும். ஜெயிலில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஜெயில் கேண்டீனில் உணவு வாங்கி சாப்பிட முடியும்.

ஜெயில் உணவு

ஜெயில் உணவு

இருப்பினும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு சிறை ஆகும் இது. இங்கு தான் பத்தி சுற்றியதாகவும், காய்கறிகள் விளைய வைத்ததாகவும் சுதா குறிப்பிட்டு உள்ளார். ஆனால் அதன்பின் மும்பையில் இருக்கும் பைகுல்லா சிறைக்கு மாற்றப்பட்டவர் அங்கு கடும் கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார். 35 பேர் தங்கும் இடத்தில் 75 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நெருக்கமாக ஒருவர் மீது ஒருவர் சாயும் அளவிற்கு நெருக்கடியான இடத்தில் இவர் தங்க வைக்கப்பட்டார். இங்குதான் 2 வருடம் சுதா அடைத்து வைக்கப்பட்டார்.

 13 பேருக்கு கொரோனா

13 பேருக்கு கொரோனா

இதனால் பல முறை கைதிகளுக்கு இடையே கடும் மோதல், சண்டை வந்து இருக்கிறது என்று சுதா உருக்கமாக தெரிவித்துள்ளார். அதோடு இவரின் செல்லில் இருந்த 55 பேரில் 13 பேருக்கு கடந்த வருடம் கொரோனா வந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் வயிற்றுக்குப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டதால் 11 நாட்கள் ஜெயிலில் இருக்கும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். சிறைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. கைதிகள் இப்படிப்பட்ட சிறைகளில் இருக்க கூடாது. இது அவர்களை மேலும் பாதிக்கும்.

சிறை கூடம்

சிறை கூடம்

சிறை கூடம் இவர்களை திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் அது இவர்களை மேலும் பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது. அரசும், நீதிமன்றங்களும் சிறைகளின் மோசமான நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். என்னுடைய சிறையில் கர்ப்பிணி பெண்கள், எச்ஐவி மூலம் பாதிக்கப்பட்ட பலர் கொரோனா காலத்தில் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்பட்டு வந்தனர். அவர்கள் எல்லோரும் பெயில் வாங்க முயன்றும் கூட பெயில் கிடைக்கவில்லை. இதைவிட பெயில் கிடைக்க வேறு என்ன காரணம் வேண்டி உள்ளது?

பெயில் விதிகள்

பெயில் விதிகள்

ஆரோக்கிய காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட பெயில் கிடைக்காமல் போகிறது. சட்டம் இவர்களின் கஷ்டங்களை உணர வேண்டும். பெயில் வழங்குவதில் விதிகளை மாற்ற வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். தான் இருந்த மும்பை சிறையில் பல நூறு பெண்கள் மிக மோசமாக கஷ்டப்பட்டதாகவும், பாலியல் தொழிலாளிகளும், வயதான பெண்களும் இதில் அதிகம் என்றும் சுதா குறிப்பிட்டுள்ளார். வலிமை இல்லாத.. ஏழ்மையான பின்னணி கொண்டவர்கள் சட்டத்தை அணுகி நீதி பெறுவது என்பது மிக மிக கடினமான காரியமாக மாறிவிட்டது.

சட்டம் மோசம்

சட்டம் மோசம்

நமது நாட்டின் சட்டம் நிலை அவ்வளவு மோசமாக கட்டத்தை எட்டிவிட்டது. பணக்காரர்கள் கோடிகள் கொடுத்து வக்கீல்கள் வைத்துக்கொள்ளும் போது சிறையில் இருக்கும் ஏழ்மையான கைதிகள் தங்களுக்கு நீதி கிடைக்க வக்கீல் ஏற்பாடு செய்ய கூட முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பலர் தங்களின் வக்கீல்களை பார்க்க முடியாமல் பல காலமாக கஷ்டப்பட்டுக்கொண்டு. இருக்கின்றனர்

நீதியின் அவல நிலை

நீதியின் அவல நிலை

நான் சிறையில் என்னை பற்றி நினைக்கவில்லை.. இந்த நாட்டின் சட்ட நிலை குறித்தும்.. அடித்தட்டு மக்களின் அவலநிலை குறித்தும்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். சிறையில் இருந்த பல நாட்கள் சக பெண் கைதிகளோடு பாடி நேரம் செலவழித்தேன்.. சிறை வேலைகளை செய்வோம். மற்ற நேரம் புத்தகங்கள் படித்தேன், Edward Snowden, William Dalrymple மற்றும் Naomi Klein ஆகியோரின் புத்தகங்களை படித்தேன். கொரோனா காலத்தில் தி பிளேக் என்னும் ஆல்பர்ட் காமஸ் புத்தக்தை படித்தேன், என்று தனது சிறை அனுபவங்கள் குறித்தும் சுதா பரத்வாஜ் பகிர்ந்துள்ளார்.

Credit : BBC.COM

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+