"ஜெகஜால கில்லாடி".. மனைவியின் வீடியோவை போலீசுக்கு காட்டிய கணவன்.. பதறிய காக்கிகள்.. பரிதாப பிஞ்சுகள்
குடித்துவிட்டு வந்து மகள்களை மனைவி தாக்குவதாக கணவன் போலீசில் புகார் தந்துள்ளார்
மும்பை: மும்பையில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி காண்போரை பதற செய்து வருகிறது.. இதுகுறித்து போலீசாரும் விசாரணையை உடனடியாக மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?
பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பல பரிதாப பெண்கள் குடும்ப சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்.. மேலும் சிலபெண்கள் வாயில்லா பூச்சிகளாய் தவித்து வந்த நிலையில், தற்கொலை முடிவையும் எடுத்து வருகின்றனர்.
சில பெண்களோ, நேரடியாகவே குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் சில விநோதங்களும், விசித்திரங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கின்றன.

சுயரூபம்
அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஒரு சம்பவம் அனைவரின் சுவாரஸ்யத்தையும் ஈர்த்தது.. அல்வார் மாவட்டத்தில் பிவாடி என்ற பகுதியில் வசித்து வருபவர் அஜித் சிங்.. இவர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்.. சுமன் என்ற ஒரு பெண்ணை காதலித்தார்.. அந்த பெண் மிகவும் அழகாக, கவர்ச்சியாக இருப்பாராம்.. அவருக்காகவே பல காலம் காத்திருந்து, ஆசை ஆசையாக விரும்பி கல்யாணமும் செய்து கொண்டார்.. ஆரம்பத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது.. ஆனால் நாளுக்கு நாள் அந்த அழகு பெண்ணின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.. அந்த பெண்ணுக்கு ரொம்ப கோபம் வருமாம்.. எதுக்கெடுத்தாலும் டென்ஷன் ஆவாராம்..

பறந்த பூரிக்கட்டை
சண்டை என்று வந்துவிட்டால் போதும், அந்த வீடே இரண்டாகிவிடுமாம்.. எப்போது சண்டை வந்தாலும், அந்த வீட்டு கதவை அந்த பெண் சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிடுவார்.. வீட்டிற்குள்ளிருந்து "டம்.. டம்.."ன்னு சத்தம் மட்டும் வெளியே கேட்குமாம்.. சப்பாத்தி கட்டையால், கணவனை போட்டு தாக்கும் சத்தம் அது.. கணவனின் தலைமுடியை பிடித்து சுவற்றில் மோதுவாராம்.. கையில் என்ன கிடைக்கிறதோ, அவை அத்தனையையும் ஹெட்மாஸ்டர் அஜித் மீதுதான் வீசுவார்.. கையில் எதுவுமே கிடைக்காவிட்டால், கணவனை எட்டி எட்டி உதைப்பாராம்.. மனைவியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவிடவும், டயர்ட ஆகிப்போன அஜித், நேராக போலீசுக்கு ஓடினார்..

கோவை சரளா
மனைவி என்னை சித்ரவதை செய்கிறார், என்னால் தினமும் அடிவாங்க முடியவில்லை.. என்று குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் புகார் கொடுத்தார். ஆனால் போலீசாரோ, அஜித்குமாரின் புகாரை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. இதனால், போலீசை நம்புவதைவிட பேசாமல் கோர்ட்டுக்கு போய்விடலாம் என்று முடிவு செய்தார் அஜித்.. ஆனால், கோர்ட்டில் ஆதாரங்கள்தானே பேசும்? தகுந்த ஆதாரங்களை கோர்ட்டில் காட்டிவிடலாம் தமக்கு விமோசனம் கிடைக்கும் என்றும் நம்பினார்.. வீட்டுக் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தாக்குவதால், வெளியே யாருக்கும் இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்பதால், வீட்டிற்குள்ளேயே மனைவிக்கு தெரியாமல் ரகசிய கேமராக்களை பொருத்தினார் அஜித்..

வெளுத்த மனைவி
வழக்கம்போல மனைவி, சம்பவத்தன்று "கோவை சரளா"வாக காட்சி தந்தார்.. வழக்கம்போல், ஹெட்மாஸ்டரை புரட்டி எடுக்கவும் துவங்கினார்.. ஒருவழியாக துவைத்து எடுத்த மேட்டர் முடிந்துவிட்டது.. இறுதியில், சிசிடிவி கேமராவை ஓடிப்போய் பார்த்தார் அஜித். அதில் தன்னை மனைவி, வெளுத்திருந்தது பக்காவாக பதிவாகி இருந்தது. முகமெல்லாம் பூரித்துப்போய், இந்த ஆதாரத்தை எடுத்துக் கொண்டு கோர்ட்டுக்கு போனார்.. நீதிபதியிடம் வீடியோவை காட்டினார்.. அந்த வீடியோ காட்சிகளை பார்க்க, பார்க்க ஜட்ஜ் அரண்டு போனார்.. இறுதியில், மனைவியால் தாக்குதலுக்குள்ளாகி தினம் தினம் சித்ரவதைக்கு உள்ளாகும் அஜித்துக்கு பாதுகாப்பு அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.. இந்த சிசிடிவி மட்டும் இல்லேன்னா, நம்ம அஜித்தின் உயிர் ஊசலாட்டம் ஆகியிருக்கும்..

2 பிஞ்சுகள்
இப்போது விஷயம் என்னவென்றால், இதுபோல இன்னொரு, பெண்ணும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.. இந்த கணவர் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார்.. இந்த பெண்ணுக்கு 33 வயதாகிறது. அத்தம்பதிக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. ஒரு மகளுக்கு 12 வயது.. இன்னொரு மகளுக்கு 6 வயது.. ஆனால், 2 மகள்களையும் அந்த பெண் கவனிப்பது கிடையாதாம்.. நிறைய குடிப்பழக்கமும் உள்ளது.. தினமும் தண்ணி அடித்துவிட்டு வந்து, மகள்களை சரமாரியாக தாக்குவாராம்.. இந்த குழந்தைகளுக்கு சின்ன வயசில் இருந்தே இப்படி பழகிப்போயுள்ளது.. தண்ணி அடித்துவிட்டால், அந்த பெண்ணை யாராலும் கன்ட்ரோல் செய்யவும் முடியாதாம்.

முறிந்த எலும்புகள்
இப்படித்தான், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, கணவர் வேலைக்கு போயிருந்தார்.. திடீரென அவர் டியூட்டியில் இருந்தபோது, அவரது அக்கம்பக்கத்தினர் வீடுகளில் இருந்து சிலர் கணவருக்கு போன் செய்தனர்.. அவர் மனைவி தாக்கியதால், 2 மகள்களின் கைகளிலும் கால்களிலும் எலும்புகள் முறிந்து, காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரிடம் சொன்னார்கள். இதைக் கேட்டு அதிர்ந்துபோன கணவர், உடனடியாக வீட்டிற்கு ஓடினார்.. அங்கே 2 மகள்களும் வலியால் கதறி கொண்டிருந்ததை பார்த்து பதறிப்போய் அவர்களுக்கு முதலுதவி செய்தார். அப்போது அந்த மகள்கள் 2 பேரும், தன் அப்பாவிடம் ஒரு வீடியோ காட்டினார்கள்..

கண்மண்ணே தெரியல
அதில், தங்கள் தாய் அவர்களை தாறுமாறாக தாக்குவதும், இந்த குழந்தைகள் கதறுவதும் பதிவாகி இருந்தது.. இதற்கு மேலும் பொறுமையிழந்த கணவர், அந்தே வீடியோ ஆதாரங்களுடன் போலீசுக்கு ஓடினார்.. வீடியோவை காட்டியதுடன், புகாரும் அளித்தார். அந்த பெண் எப்போதுமே இப்படித்தானாம்.. கடந்த 8 வருடங்களாகவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வந்துள்ளார்.. அதை தடுக்க எவ்வளவோ முயன்றும் தன்னால் முடியவில்லை என்று வருத்தமாக சொல்கிறார் கணவர்..

ஜூவல் டிசைனர்
குடித்துவிட்டால், கண்மண் தெரியாமல் அடித்து தாக்குவதாகவும், பெரும்பாலும் மகள்களையே அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும் போலீஸாரிடம் கணவர் அளித்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.. இத்தனைக்கும் அந்த பெண் நன்றாக படித்தவராம்.. நகை வடிவமைப்பாளராகவும் கைநிறைய சம்பவளத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மிரா பயந்தர்-வசாய் விரார் (எம்பிவிவி) போலீஸார் பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறார்கள்.. இன்னும் விசாரணை நடக்கிறது. குடித்துவிட்டு வந்து மனைவி தாக்குவதாக கணவன் கூறிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications