உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
மும்பை: உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் 'விர்ஜின்' குழுமத் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன், தனது மூதாதையர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்க்கப்பட்ட போது, இந்த உண்மை தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
1793 ஆம் ஆண்டு முதல், நான்கு தலைமுறைகளாக எங்கள் மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூர் பகுதியில் வசித்து உள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் எனது மூதாதையர் திருமணம் செய்துள்ளார். எனவே, ஒவ்வொரு முறை, நான் இந்தியர்களை சந்திக்கும் போதெல்லாம், இவர்கள் எனது உறவினர்களாக இருக்கக்கூடும் என்று பெருமிதம் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விர்ஜின் குழுமம்
பிரிட்டனை சேர்ந்த, 69 வயதாகும் ரிச்சர்ட் பிரான்சன், புகழ்பெற்ற விர்ஜின் என்ற தொழில் குழுமத்தின் தலைவராகும். ஏர்லைன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.

முதலீடு
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவை சந்தித்து, ஹைப்பர் லூப் தொழில்முதலீடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் மும்பை வருகை தந்துள்ளார். அப்போதுதான் இந்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாரம்பரியம்
தமிழகத்தின் பூர்வீகம் என்பது மிகவும் பழமையானது. காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த போதிதர்மர் மற்றும் சீனா நாட்டுக்கு இடையேயான உறவு அனைவரும் அறிந்ததே. போதிதர்மரை புத்தமதத்தின் குருக்களில் ஒருவராக சீனர்கள் கருதுகிறார்கள்.

மூத்த குடி
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, என்ற புகழ்பெற்ற தமிழ் மரபு, பல்வேறு நாடுகளிலும் பரந்து விரிந்து கிளைகளை பரப்பி உள்ளது என்பது இதுபோன்ற டிஎன்ஏ டெஸ்ட்களின் மூலமும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications