காவு வாங்கும் “ஆபரேசன் லோட்டஸ்”.. சிவசேனாவை சிதைத்து, தேசியவாத காங்கிரஸை தெறிக்கவிட்ட பாஜக! போச்சே
மும்பை: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 2 பிரதான கட்சிகளை ஆபரேசன் லோட்டஸ் மூலமாக இரண்டே ஆண்டுகளில் உடைத்து அதன் ஆதரவாளர்களை தன் வசம் ஈர்த்து இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
மகாராஷ்டிரா மாநில அரசியல் தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சமின்றி சென்றுகொண்டு இருக்கிறது. அம்மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. ஆனால், முதலமைச்சர் தேர்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.

உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றார். சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. சிவசேனா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றால் குறி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பாஜக தனது வேலையை காட்டியது.
உத்தவ் தாக்கரேவை கவிழ்க்க அவரது தளபதியான ஏக்நாத் ஷிண்டேவையே தேர்வு செய்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் ஆசை காட்ட அவரும் கவிழ்ந்துவிட்டார். இறுதியாக அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களை வளைத்து குஜராத்துக்கு கூட்டி சென்றார். அதன் பின்னர் அசாமுக்கு ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்றனர்.
இறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் சிவசேனா ஆட்சியை பிடித்தது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். அதன் பிறகு கட்சி, சின்னம் என அனைத்துமே ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் வந்தது.

உத்தவ் தாக்கரே அதை மீட்க போராடி வருகிறார். குறிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அதை தொடர்ந்து நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வென்று கட்சியையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அதேபோல் மகாராஷ்டிராவின் பிரதான கட்சியான தேசியவாத காங்கிரசும் பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் உள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் சரத் பவாரும் கலந்துகொண்டார். அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று அவர் அறிவித்த நிலையில் அவருக்கே தெரியாமல் ஒரு சம்பவம் அவரது கட்சிக்குள் நடந்துள்ளது. சரத் பவாரின் சகோதரர் மகனும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் 30 பேர் சிவசேனா - பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளார்கள்.
தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார். அவருடன் என்சிபி எம்.எல்.ஏக்கள் சகன் புஜ்பால், திலிப் வால்சே பாட்டில், தனன்ஜெய் முண்டே ஆகியோரும் அமைச்சராக பதவியேற்று உள்ளார்கள்.
இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேலும் அஜித் பவாரும் ஆளுநர் மாளிகைக்கு சென்ற காட்சிகளும் பதிவாகின. 2019 தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தபோதே அஜித் பவார் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் வகையில் நடந்துகொண்டார். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு துணை முதலமைச்சர் பதவி அளித்தார் சரத் பவார்.
அண்மையில் கூட மீண்டும் சரத் பவாருக்கு எதிராக அஜித் பவார் தரப்பினர் போர்க்கொடி தூக்கினர். அப்போதும் அவர்களை சமாதானப்படுத்தி தலைவர் பொறுப்பை துரந்து பதவிகளை பிரித்துக்கொடுத்தார் சரத். அப்படி இருந்தும் துணை முதலமைச்சர் பதவிக்காக கட்சியை உடைத்துவிட்டார் அஜித் பவார் என்கிறார்கள் சரத் பவார் ஆதரவாளர்கள். 2024 தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான மகாராஷ்டிராவின் 2 பிரதான கட்சிகளை 2 ஆண்டில் ஆபரேசன் லோட்டஸ் மூலமாக உடைத்து இருக்கிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications