Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா: 'மராத்தா' Vs 'பிராமணர்': தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகிறார்.. இன்று பாஜக அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியின் புதிய அரசு வரும் 5-ந் தேதி பதவியேற்கிறது. மகாயுதி கூட்டணி அரசின் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை மராத்தா சமூகத்தினரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் சிறுபான்மை பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஆனாலும் புதிய ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில்தான் வரும் 5-ந் தேதி மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

maharashtra assembly election 2024 2024

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற போதும் முதல்வர் பதவி தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே மோதல் வெடித்தது. முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே விட்டுத்தரவில்லை. இதனால் பிரதமர் மோடி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முதல்வர் பதவியை விட்டுத் தந்தார் ஏக்நாத் ஷிண்டே.

ஆனால் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க வேண்டும்; ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சர் இலாகா ஒதுக்க வேண்டும் எனவும் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தினார். இதனால் பாஜக- சிவசேனா இடையேயான மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பாஜக சட்டசபை குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினரையே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இதுவரையில் மராத்தா ஜாதியினர் இல்லாமல் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட 2 பிராமணர்கள்தான் முதல்வர்களாக இருந்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் முன்னர் முதல்வராக இருந்த போது மராத்தா ஜாதி லாபி அவருக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது.

தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக வெற்றி பெற்ற போதும் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்பது பாஜகவினர் எதிர்பார்ப்பாக இருந்தது; ஆனாலும் மராத்தா லாபி மீண்டும் தலைதூக்கி தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த தடைகளை எல்லாம் உடைத்து மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராக இருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+