மகாராஷ்டிராவில் உச்சகட்ட குழப்பம்- அடுத்தது என்ன? ஜனாதிபதி ஆட்சி? பட்னாவிஸ் தலைமையில் பாஜக அரசு?
மும்பை: மகாராஷ்டிராவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் உருவாகி உள்ள நிலையில் அடுத்ததாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக வலியுறுத்தக் கூடும்; அதேநேரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக புதிய அரசு அமைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என கூறப்படுகிறது.
Recommended Video
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் சிவசேனா கட்சியில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தற்போதைய நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் 13 எம்.எல்.ஏக்கள் கை கோர்த்திருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் பல எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாயக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான சிவசேனா மற்றும் ஆதரவு தந்த சிறிய கட்சி, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மொத்தம் 26 பேர் பாஜக ஆளும் குஜராத்தின் சூரத் நகரில் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலகக் குரல் எழுப்பியுள்ள ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற நிபந்தனையை முன்வைக்க வாய்ப்பிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக- 106; சிவசேனா 55; தேசியவாத காங்கிரஸ்-51; காங்கிரஸ் 44; இதர கட்சிகள், சுயேட்சைகள்- 29. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 145 எம்.எல்.ஏக்கள். சிவசேனா தரப்பில் இருந்து 13, இதர கட்சிகள், சுயேட்சைகள் 13 என மொத்தம் 26 பேர் இப்போது பாஜக ஆதரவு நிலையில் உள்ளனர். பாஜகவுக்கு மேலும் 10 முதல் 15 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க தமது பக்கம் 37 சிவசேனா எம்.எல்.ஏக்களை இழுக்க வேண்டும்.
இப்படியான நிலையில் மகாராஷ்டிராவில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பாஜக வலியுறுத்துவதில் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. சிவேந்திரராஜி போஷ்லே, மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு விரைவில் அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications