மகாராஷ்டிரா, குஜராத்தில் கொடி நாட்டும் பாஜக.. ஒற்றை இலக்கத்தில் சுருங்கும் காங். பரபர சர்வே ரிசல்ட்
மும்பை: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிர மற்றும் குஜராத் மாநிலங்களில் என்டி கூட்டணி, இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்பது குறித்து ஜீ நியூஸ் - மேட்ரைஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் மகாராஷ்டிராவும், குஜராத்தும் முக்கியமான மாநிலங்களாகும். ஒரு காலத்தில் குஜராத் மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, குஜராத் உருவானது. தற்போதைய அரசியல் சூழலில் குஜராத் பாஜகவின் கோட்டையாக இருக்கிறது. இங்கு கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மொத்தம் இருந்த 26 தொகுதிகளில் பாஜக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது.

இந்த முறையும் பாஜக அனைத்து தொகுதிகளையும் கைப்பறும் என்று ஜீ நியூஸ் - மேட்ரைஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதேபோல கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் மொத்தமிருந்த 48 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 41 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளையும் வென்றிருந்தது. இந்த முறை என்டிஏ 43 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 3 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications