பெண்களுக்கு ரூ1,500 வழங்கியதில் பாஜக கூட்டணி அரசின் புதுமை! திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. மகாராஷ்டிராவில் மீண்டும் மகாயுதி கூட்டணி ஆட்சியே தொடர இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிரதான காரணமாக அனைவராலும் சுட்டிக்காட்டப்படுவது பெண்களுக்கான உதவித் தொகை திட்டம். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறையில் இருந்தாலும் மகாராஷ்டிரா பாஜக அரசு செயல்படுத்திய விதம், பெண்கள் வாக்குகளை மொத்தமாக அந்த கூட்டணிக்கு கொட்ட வைத்துவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக தனித்தே 132 இடங்களில் வெற்றி பெற்றது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 57; அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41; உத்தவ் தாக்கரே சிவசேனா 20; காங்கிரஸ் 16; சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றன. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள். பாஜக கூட்டணியோ 230 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

election results 2024 maharashtra assembly election 2024 jharkhand assembly election 2024 by poll election 2024

பிரம்மாண்ட வெற்றி: மகாராஷ்டிராவில் பாஜக பெற்ற முதலாவது பிரம்மாண்ட வெற்றி. 1972-ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சி அல்லது கூட்டணி இத்தனை இடங்களை அள்ளியதும் கிடையாது. பாஜக கூட்டணியின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பெண்களின் வாக்குகள் மிகப் பெரிய உதவியாக இருந்துள்ளது என கூறப்படுகிறது. இதற்கு காரணமே பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் அன்பு சகோதரி திட்டம்.

பெண்களுக்கு நிதி உதவி: தமிழ்நாடு மட்டுமல்ல.. நாட்டின் பல மாநிலங்களிலும் பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையே தலைகீழாக எப்படிப் புரட்டிப் போட்டது இந்தத் திட்டம்?

மகாராஷ்டிரா பார்முலா: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர்தான் பெண்களுக்கு மாதம் ரூ1,500 வழங்கும் நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தியது தெரியுமா? ஒரே கட்டமாக 5 மாத தவணை பணத்தை பெண்களில் வங்கிக் கணக்கில் செலுத்தியது பாஜக கூட்டணி அரசு. அதாவது சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ7,500 கொடுத்தது பாஜக அரசு. இந்தத் திட்டத்தில் விட்டுப் போன பெண்களையும் கணக்கில் எடுத்து 'தகுதி' உள்ளவர்கள் என்கிற பாரபட்சம் எல்லாம் பார்க்காமல் லம்ப்பாக ரூ7,500 அரசுப் பணத்தை அள்ளிக் கொடுத்தது பாஜக கூட்டணி அரசு.

பெண் வாக்காளர்கள்: மகாராஷ்டிராவில் 4.70 கோடி பேர் பெண் வாக்காளர்கள். இவர்களில் 2.30 கோடி பேருக்கு ரூ7,500 பணத்தை ரொக்கமாகவே வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டது பாஜக கூட்டணி அரசு. அத்துடன் நிற்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப் போட்டால் இந்த தொகையை ரூ2,100 ஆகவும் உயர்த்துவோம் எனவும் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்தது. இதேபோல பெண் வாக்காளர்களை குறிவைத்து பாஜக அரசு பேருந்து பயணத்தில் சலுகை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியது. இதனால் பெண் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜக கூட்டணிக்கு தங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொட்டிக் குவித்துவிட்டனர். பாஜக பெருமையுடன் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த மகாராஷ்டிரா பார்முலாவை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இனி தேர்தல் களத்தில் பயன்படுத்தலாம்.

வெங்காயம்: இதேபோல பாஜக கூட்டணி அரசின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் 'வெங்காயம்'. மத்தியில் ஆளும் பாஜக அரசு, வெங்காய ஏற்றுமதி தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் நாசிக் உள்ளிட்ட பிராந்தியங்களில் வெங்காய விவசாயிகள் பெரும் துன்பத்துக்குள்ளாகினர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கிவிட்டது. இதனால் வெங்காய விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சியையும் விவசாயிகள் வாக்குகளாக பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+