பாஜகவுக்கு படுதோல்வி- “நட்டநடு நாயகமாக சரத்பவார்”.. “இந்தியா” கூட்டணியை உடைக்கும் முயற்சி டக் அவுட்!
மும்பை: "இந்தியா" கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எப்படியாவது வெளியேற்றிவிடலாம் என பாஜக மேற்கொண்ட பகீரத முயற்சிகள் அத்தனையும் தோல்வியைத் தழுவிவிட்டன. மும்பையில் இன்று நடைபெறும் "இந்தியா" கூட்டணியில் சரத்பவார் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
"இந்தியா" கூட்டணியின் 2-வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அப்போது தேசியவாத கட்சியின் தலைவர் சரத்பவாரை திடீரென பாஜக ஆதரவு துணை முதல்வர் அஜித் பவார் சந்தித்து பேசினார். இதனால் "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. "இந்தியா" கூட்டணியில் இருந்து சரத்பவாரை வெளியேற்றத்தான் பாஜக முயற்சிக்கிறது என்பது பொதுவான கருத்தாக இருந்தது. இதற்கேற்ப சரத்பவாரும் பெங்களூர் கூட்டத்தின் முதல் நாளில் பங்கேற்கவும் இல்லை.

ஆனால் திடீரென பெங்களூர் கூட்டத்தில் 2-வது நாளில் சரத்பவார் பங்கேற்றார். ஆனாலும் பாஜக விடுவதாக இல்லை. அஜித்பவாரை இடைவிடாமல் அனுப்பிக் கொண்டே இருந்தது. சரத்பவாருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த வைத்தது பாஜக. இதனால் ஒரு கட்டத்தில் சரத்பவார் மதில்மேல் பூனை நிலைக்கு தள்ளப்பட்டும்விட்டார். தேசியவாத காங்கிரஸில் நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம்; எங்களில் சிலர் பாஜகவை ஆதரிக்கின்றனர்.. எங்கள் கட்சியில் பிளவு எதுவும் இல்லை என பேட்டி கொடுத்து "இந்தியா" கூட்டணிக்கு பீதியை ஏற்படுத்தினார் சரத்பவார்.
இதனால் மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்பாரா? அல்லது பாஜக மகிழும் வகையில் "இந்தியா" கூட்டணி கூட்டத்துக்கு குட்பை சொல்வாரா? என்ற குழப்பம் தொடர்ந்தது. ஆனால் நேற்று "இந்தியா" கூட்டணி கூட்டம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சரத்பவாரும் நடுநாயகமாக இருந்தார். இந்தியா கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இடம் பெறும் என்பதுதான் இப்போதைக்கு அந்த அணியின் தலைவர்களுக்கான நிம்மதியான செய்தி. பாஜகவின் இதுவரையிலான முயற்சிக்கு முதல் கட்ட பின்னடைவாகவே இது பார்க்கப்படுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications