30 ஆண்டு பிடியை மேலும் இறுக்கும் உத்தவ் அணி.. மும்பையை வசப்படுத்த போட்டி! விட்டுக்கொடுக்காத பாஜக
மும்பை: சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 286 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக+ஷிண்டே சிவசேனா அணி வெற்றிப்பெற்றிருந்தது. இந்நிலையில், ஜன.15ம் தேதி மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி, பாஜக 85 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது, அதைத் தொடர்ந்து சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சி 62 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார மாநகராட்சியாக மும்பை இருக்கிறது. இதனை கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டுடன் மும்பை மாநகராட்சியின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

மும்பை தமிழர்கள்
மும்பையை யார் ஆளுவார்கள் என்பதை தீர்மானிப்பதில் தமிழர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை 5 வார்டுகளில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
1. தாராவி
2. சியன்
3. அந்தேரி
4. செம்பூர்
5. காட்கோபர்
தமிழர்களின் வாக்கு
இதில் தாராவி என்பது ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளின் ஒன்றாக இருக்கிறது. இங்கு தாராவி மறுசீரமைப்பு திட்டம் பெரிய அளவில் விவாதமாக மாறியிருக்கிறது. இந்த திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் உத்தவ் சிவசேனா குரல் கொடுத்து வருகிறது. எனவே இங்குள்ள தமிழர்களின் வாக்குகள் இந்த அணிக்கு போக வாய்ப்பு இருக்கிறது. சியோன் பகுதியிலும் தமிழர் பாரம்பரியமாக காங்கிரஸ் ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். இருப்பினும் தமிழ் செல்வன் போன்ற உள்ளூர் தமிழ் தலைவர்களை பாஜக முன்னிறுத்துவதால், காங்கிரஸ்+உத்தவ் சிவசேனா வாக்கு வங்கிக்கு சவால் ஏற்பட்டிருக்கிறது.
வாக்குப்பதிவு
தேர்தலில், 54% முதல் 56% வரை பதிவாகியிருக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். 2017ல் 55% வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மிஸ்ஸானது அல்லது முன்னறிவிப்பு இல்லாமல் வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டது போன்ற புகார்களுக்கு மத்தியிலும் இந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளது.
கருத்துக்கணிப்புகள்
கருத்துக்கணிப்புகளில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணிக்கு வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கின்றன. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில், பாஜக-ஏக்நாத் ஷிண்டே கூட்டணி 227 இடங்களில் 131-151 இடங்களை வெல்லும் எனக் கணித்தது. தாக்கரே சகோதரர்களின் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) - எம்.என்.எஸ் கூட்டணிக்கு 58-68 இடங்கள் என்றும், சாம் டிவி இவர்களுக்கு 77 இடங்களும், பாஜக-சிவசேனா கூட்டணிக்கு 119 இடங்களும் என கணித்துள்ளது. கடந்த 2017ல் ஒன்றுபட்ட சிவசேனா 84 இடங்களைப் பெற்றிருந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு கருத்துக்கணிப்புகள் அதிகபட்சம் 25 இடங்களையே கணித்தன (முந்தைய தேர்தலின் 30+ இடங்களிலிருந்து இது குறைவு). தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சிகள் மும்பை தேர்தலில் பெரிய தாக்கத்தை செலுத்தவில்லை.
தேர்தல் சர்ச்சைகள்
இப்படி இருக்கையில் தேர்தலில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. குறிப்பாக, வாக்களிப்பவர்களுக்கு கையில் அழியாத மை வைக்கப்படும். ஆனால், இந்த தேர்தலில், அழியாத மைக்கு பதிலாக மார்க்கர் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையானது. இது கள்ள வாக்குகளுக்கு வழிவகுக்கும், அடையாளத்தை எளிதில் அழிக்க முடியும் என்பதால், மாநில தேர்தல் ஆணையம் மகாயுதி கூட்டணியுடன் சதி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த தேர்தலை பொறுத்தவரை பாஜக+ஷிண்டே கூட்டணி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில், இரு கூட்டணிகளும் இரண்டு பெரிய முழக்கங்களை முன்வைத்திருந்தன. பாஜக+ஷிண்டே கூட்டணி, 'இந்து மராத்தி' மேயர் மும்பைக்கு வேண்டும் என்றும், காங்கிரஸ்+உத்தவ் சிவசேனா கூட்டணி, மராட்டியர்கள்தான் மும்பையை ஆளவேண்டும், எனவே மராட்டியர்கள்தான் மேயராக வரவேண்டும் என்று பிரச்சாரத்தை முன்வைத்திருக்கிருந்தது.
இந்த பிரச்சனைகளுக்கு இடையில்தான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இன்று வாக்கு எண்ணிக்கையில், எந்த கட்சி அதிகாரத்தை வசப்படுத்துகிறது என்பது தெரிந்துவிடும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications