ஆர்யன் கான் போதை பொருள் வழக்கு.. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கு சம்மன்- யார் இவர்? என்ன பின்னணி?
மும்பை: போதை பொருள் வழக்கில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடத்தியதாக நடிகர் ஷாருக்கனின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் அக்டோபர் 3ம் தேதி முன் கைது செய்யப்பட்டனர். மும்பையில் எம்ப்ரெஸ் என்ற சொகுசு கப்பலில் பார்ட்டி நடந்த போது செய்யப்பட்ட சோதனையில் போதை பொருட்கள் சிக்கியது.
போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த கப்பலில் ரேவ் பார்ட்டி நடக்க போவதாக கிடைத்த தகவலை வைத்து இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த கப்பலில் ஆர்யன் கான் இருந்ததால் கைது செய்யப்பட்டார். பாலிவுட் சினிமா உலகிற்கு நெருக்கமான பலர், பிரபலங்கள் பலர் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர்.

பெயில் மறுப்பு
போதை பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் மும்பை ஆர்த்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுவரை இரண்டு முறை பெயில் மறுக்கப்பட்டுவிட்டது. மும்பை சிறப்பு கோர்ட் இவருக்கு பெயில் மறுத்துள்ள நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இவரின் பெயில் மனு அடுத்த செவ்வாய் கிழமை விசாரிக்கப்பட உள்ளது.

வாட்ஸ் ஆப் சாட்ஸ்
இவரின் பெயில் மனு மறுக்கப்பட முக்கியமான காரணம் ஆர்யன் கான் போனில் இருந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள்தான். ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும் அவரின் நெருக்கிய நண்பரும், கப்பலில் அவருக்கு அருகில் இருந்தவருமான அர்பாஸ் என்ற நபர் ஒருவரிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இவர்கள் இருவரும் வாட்ஸ் ஆப்பில் போதை பொருட்கள் குறித்து பேசிய ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு
அதோடு பல நபர்களிடம் ஆர்யன் கான் வாட்ஸ் ஆப் மூலம் போதை பொருள் குறித்து பேசி இருக்கிறார். போதை பொருள் விற்பனை, வாங்குவது என்று பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அந்த குறிப்பிட்ட ரேவ் பார்ட்டி குறித்தும் அவர் உரையாடி உள்ளார். இதன் அடிப்படையில்தான் ஆர்யன் கானின் பெயில் மறுக்கப்பட்டது. அதே கப்பலில் இருந்த ஆர்யன்கான் நண்பர் ஒருவரின் போனில்தான் நடிகை அனன்யா பாண்டே போன் எண் இருந்துள்ளது. இவர்கள் வாட்ஸ் ஆப்பில் போதை பொருள் வாங்குவது குறித்து பேசியதாக தெரிகிறது.

அனன்யா பாண்டே
இதன் அடிப்படையில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கு தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இன்று அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த உள்ளது. கப்பலில் கைது செய்யப்பட்ட 19 பேரில் சிலருடன் இவர் வாட்ஸ் ஆப்பில் போதை பொருட்கள் குறித்தும், அதை வாங்குவது குறித்தும் அனன்யா பேசி இருக்கிறார்.

யார் இவர்?
அனன்யா பாண்டேவுக்கு 22 வயதுதான் ஆகிறது. பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகள் அறிமுகம் டிரெண்ட் உருவான நேரத்தில்தான் இவரும் அறிமுகம் ஆனார். பிரபல நடிகர்கள் சுங்கி பாண்டே, பாவனா பாண்டே ஆகியோர் மகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தி ஸ்டுடன்ட் ஆப் தி இயர் 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் பாலிவுட் படமான லிகர் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

சம்மன்
வாட்ஸ் ஆப் சாட்ஸ் அடிப்படையில் இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆர்யன் கான், அனன்யா பாண்டே இருவரும் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரும் சில பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆர்யன் கானின் சகோதரி சஹானா அனன்யா பாண்டேவின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அனன்யா பாண்டே விசாரணை வலையில் சிக்கி உள்ளார்.

என்சிபி
இன்று ஷாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு ரெய்டு நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் இது ரெய்டு இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. வெறும் கையொப்பம் வாங்குவது உள்ளிட்ட சில பணிகளுக்காக அங்கே சென்றோம், ரெய்டு நடக்கவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications