உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மும்பை: மத்திய கிழக்கு மோதல் காரணமாக இந்தியாவில் எல்பிஜி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல் சில நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த பிப்ரவரி 28ம் மாதம் வெடித்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் பாதிப்புகள் சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ள சூழலில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

எல்பிஜி சப்ளை பாதிப்பு
இப்படி நாட்டில் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொள்ளாமல் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவுகள் இருந்தும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டது. 6 முக்கிய கேஸ் ஏஜென்சிக்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நாக்பூர் அமர்வு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) மற்றும் கான்ஃபிடன்ஸ் பெட்ரோலியம் இந்தியா லிமிடெட் ஆகியோரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ராஜ் வக்கோடே அடங்கிய பிரிவு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்?
இப்போது உள்நாட்டு சப்ளை பாதிக்கப்பட்டு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தச் சூழலிலும் எல்பிஜி ஏற்றுமதியைத் தொடர்வது, வீட்டு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தும் இயற்கை எரிவாயு (விநியோக ஒழுங்குமுறை) சட்டம், 2026க்கு முரணானது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
மார்ச் 9ம் தேதி மத்திய அரசும் இது தொடர்பாக முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விநியோகப் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் உள்நாட்டுச் சந்தைகளுக்கு எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், சில பெட்ரோலியம் நிறுவனங்கள், அதன் சர்வதேச ஏற்றுமதி ஒப்பந்தங்களைக் காரணம் காட்டி உள்நாட்டு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்க மறுத்ததாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.
விசாரணை
நிலைமை சீரடையும் வரை உள்நாட்டுச் சந்தைகளுக்கு எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தை மனுதாரர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், இந்த விவகாரம் பொதுமக்களின் கவலைகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டனர். மேலும், "இந்த விவகாரம் தீவிரமானதும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்" எனச் சொல்லி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.. மேலும், அடுத்த விசாரணைக்கு முன் மத்திய அதிகாரிகளிடம் இருந்து பதில்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.
நோட்டீஸ்
மேலும், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளது. அதில் அனைத்து கேஸ் உற்பத்தி நிறுவனங்களும் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சேமிப்பு மற்றும் விநியோகம் மற்றும் மத்திய அரசின் கொள்கைகளை இணங்கி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், வழக்கு விசாரணையையும் மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முன்பு, எதிர் மனுதாரர்கள் தங்கள் விளக்கங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மத்திய அரசு மற்றும் DGFT சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் முக்தா சந்துர்கர் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திக் சுக்ல நோட்டீஸை ஏற்றுக்கொண்டனர்.
-
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications