BULLI BAI: இஸ்லாமிய பெண்களை ஏலம் விட்ட "புல்லிபாய்".. 21 வயது மாணவர் கைது.. கிடுக்கிப்பிடி விசாரணை
புல்லிபாய் ஆப் புகார் தொடர்பாக ஒரு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்
மும்பை: இஸ்லாமிய பெண்களின் போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும், மொபைல் ஆப்களிலும் அவர்களுக்கே தெரியாமல் பதிவிட்டு, அவர்களை ஏலமிடும் "புல்லிபாய்" ஆப் குறித்த புகாரில், 21 வயது பெங்களூரு மாணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்... கைதான மாணவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
ஆப்கனை தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததில் இருந்தே அங்கே பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.. மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளனர்.. உணவு பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது..
கையில் பணமில்லாததால் குழந்தைகளை பெற்றோர்கள் பட்டினி போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.. அதிலும் குறிப்பாக மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதி, போர் மற்றும் பஞ்சத்தால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

வறுமை
இப்படிப்பட்ட சூழலில், தங்கள் பெண் குழந்தைகளை வறுமைக்காக விற்கும் கொடுமையும் அங்கு தலைதூக்கி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், சோஷியல் மீடியாவில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியானது.. இது குறித்த ஆப்பை இந்தியாவில் முடக்கப்பட்டுவிட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.. ஆனால், புல்லிபாய் என்ற ஆப் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, பெண்களை ஏல விற்பனைக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

பெண்கள்
ஹிட்ஹப் ஆப்ஸ் மூலம் சல்லிடீல், புல்லிபாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த ஆப்களில் இஸ்லாமிய முஸ்லிம் பெண்களின் போட்டோக்களை பதிவிட்டு, "டீல் ஆஃப் தி டே" என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.. இந்த ஆப் மூலம் பெண்கள் ஏலம் விடப்படவில்லை என்றாலும், இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்துள்ளதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.

மும்பை போலீஸ்
இதில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மும்பை போலீசாருக்கும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கும் சிவசேனை எம்பி பிரியங்கா சதுா்வேதி ட்விட்டரில் மிக முக்கிய கோரிக்கையை விடுத்திருந்தார்.. அதில், "இப்படித்தான், கடந்த வருடம் டெல்லியிலும், உ.பி.யிலும் நடந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது, ஆனால், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று சுட்டிக்காட்டிய சிவசேனா பிரியங்கா திரிவேதி,, அந்த ட்வீட்டில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வையும் டேக் செய்திருந்தார்.

விசாரணை
இதையடுத்து, உடனடியாக புல்லிபாய் ஆப் குறித்து டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. இறுதியில், அந்த ஆப் முடக்கப்பட்டுவிட்டதாக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.. மேலும், இணையவழி குற்றங்களை கண்காணிக்கும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கைக் குழுவும், போலீசாரும் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் உறுதி தந்திருந்தார்.

புல்லிபாய்
இப்படிப்பட்ட சூழலில், புல்லிபாய் ஆப் பதிவேற்றம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைதாகி உள்ளார்.. இஸ்லாமிய பெண்களின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் அவர்களுக்கே தெரியாமல் பதிவிட்டு, அவர்களை ஏலமிடும் 'புல்லிபாய்' ஆப் குறித்த புகாரில், பெங்களூரை சேர்ந்த அந்த இளைஞன் கைதாகி உள்ளார்.. 21 வயதாகிறது.. பொறியியல் மாணவரான இவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்... ஆனால், மாணவரின் வயது, படிப்பு, எதிர்காலம் போன்ற காரணங்களினால், மாணவரின் பெயரையும், அடையாளங்களையும் வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.

ட்வீட்
அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்... இதைதவிர, இந்த ஆப்கள் தொடர்பாக முதன்முதலில் ட்வீட் செய்தவர்களின் விவரங்களையும் ட்விட்டர் நிறுவனத்திடம் போலீஸார் கேட்டுள்ளனர்.. டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ராகேஷ் அஸ்தானா, இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை வரும் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய டெல்லி நகர போலீஸ் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்... முஸ்லிம் பெண்களின் நலன், பாதுகாப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

நோட்டீஸ்
இதனிடையே, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து டெல்லி மகளிர் ஆணையம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது... இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டெல்லி கமிஷனர் ஆபீசில் நேரில் ஆஜராக கோரி மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது... அனைத்து தரப்பிலும் நடவடிக்கைகள் துரிதமாகி உள்ளதால், விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு எட்டப்படும் என்று நம்பப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications