Bulli Bai: அடுத்தடுத்து சிக்கிய மைனர்ஸ்.. இஸ்லாமிய பெண்களை ஏலம் விட்ட கும்பல்.. பின்னணியில் இளம்பெண்
மும்பை: Bulli Bai என்ற செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் இதற்கு பின் இருந்த பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த செயலிக்கு பின் பெண் ஒருவர் காரணகர்த்தாவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு சர்ச்சையாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்தான் Sulli Deals என்ற செயலி முடக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த Bulli Bai செயலி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை ஏலம் விட்டு கமெண்ட் செய்யும் செயலி ஆகும். இதில் பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் ஏலம் விட்டு விற்பனை செய்து உள்ளனர். இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர்.

புகார்
இந்த செயலிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், டெல்லி போலீஸ் இதில் எப்ஐஆர் பதிவு செய்தது. ஆனால் இதில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் மும்பை போலீஸ் இதில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தது. இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் அவர்களை ஏலம் விடுத்த கும்பலை ஒவ்வொருவராக மும்பை போலீஸ் கைது செய்து வருகிறது.

Bulli Boi செயலி
இந்த நிலையில் இந்த Bulli Boi செயலியில் இஸ்லாமிய பெண்களை ஏலம் விட்ட 21 வயது இளைஞர் நேற்று முதல்நாள் கைது செய்யப்பட்டார். இவர் பெங்களூரில் கல்லூரி படித்து வரும் மாணவர். சிவில் என்ஜினியரிங் மாணவர் ஆன இவர் பெங்களூரில் இருந்து கொண்டு இந்த செயலியை நடத்தி வந்து இருக்கிறார். இவர் பயன்படுத்திய Bulli Boi செயலியின் ட்விட்டர் கணக்கை வைத்து ஐபி அட்ரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து இவரின் இருப்பிடத்தை மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்,

Sulli Deals
இதையடுத்து மும்பை போலீஸ் மூலம் இவர் கைது செய்யப்பட்டார். முதலில் இவரின் பெயரை போலீசார் சொல்லவில்லை. இவரின் வயது மட்டுமே கூறப்பட்டது. விசாரணைக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறி இவரின் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இவரின் பெயரை மும்பை போலீசார் வெளியிட்டனர். இவர் விஷால் ஜா. இந்த செயலியை நடத்தி வந்தவர்களில் இவரும் ஒருவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Bulli Boi கைது
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்னொரு திருப்பமாக நேற்று மைனர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரகாண்டை சேர்ந்த பெண் ஒருவர் கைதானார். இவருக்கு 17 வயது இப்போதுதான் ஆகி உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த இளம்பெண்தான் ஆப்பை நடத்துவதற்கு பின் இருந்த மாஸ்டர் மைண்ட். அவருக்கு ஆதரவாக பல இளம் ஆண்கள், மைனர்கள் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த செயலியை நடத்தி உள்ளனர்.

பெங்களூர் இளைஞர்
அந்த 17 வயது பெண்ணை நேற்று மும்பை போலீசார் கைது செய்து மும்பைக்கு அழைத்து சென்றனர். மைனர் பெண் என்பதால் சில விதிகளை பின்பற்றி, பெண் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு மும்பைக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதில் அதிர்ச்சி தரும் விஷயம் இரண்டு பேருமே சீக்கியர்கள் கணக்கில் போலி ட்விட்டர் பக்கங்களை நடத்தி வந்துள்ளனர். காலிஸ்தானி ஆதரவாளர்கள் போல பெயர் வைத்து நடித்து உள்ளனர்.

Bulli Boi பெண் கைது
அதாவது இஸ்லாமிய பெண்களை சீக்கியர்கள் ஏலம் விடுவது போன்ற பிம்பத்தை இருவரும் ஏற்படுத்த முயன்று உள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே இந்துக்கள்தான் என்று மும்பை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். முக்கியமாக இந்த Bulli Boi செயலி சர்ச்சையான போது வேண்டுமென்றே தன்னுடைய கணக்குகளின் பெயர்களை இவர்கள் சீக்கிய பெயர்கள் போல மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரியாக டிசம்பர் 31ம் தேதி Bulli Boi சர்ச்சை எழுந்த போது இவர்கள் இப்படி பெயர்களை மாற்றி உள்ளனர்.

பெண்கள் ஏலம்
இந்த நிலையில் மும்பை போலீசார் தெரிவிக்கையில் இதுவரை இரண்டு பெயரை கைது செய்து இருக்கிறோம். ஆனால் இவர்கள் மட்டும் இந்த குழுவில் இடம்பெறவில்லை. இன்னும் பலர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர். அதிலும் சிலர் 18 வயதுக்கு குறைவான மைனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மைனர் கைதாகி உள்ளனர். விரைவில் முறையான விசாரணைக்கு பின் மற்றவர்களையும் கைது செய்வோம் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications