ஓடும் ரயிலில் ஏறி நொடியில் சரிந்த பெண் பயணி.. சட்டென கடவுளாக வந்த பெண் காவலர்.. நீங்களே பாருங்க

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரயிலில் ஏற விரும்பும் பயணிகள், குறிப்பாக புறநகர் ரயில்களில் ஏறும் பயணிகள், திடீரென விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். ஓடும் ரயிலில் ஏறுவதோ, இறங்குவதோ கூடாது என்கிற நிலையில், அதையும் மீறி ஏறுவதால் விபத்தில் சிக்கி விடுகிறார்கள். அப்படி விபத்தில் சிக்கிய பெண்ணை, ரயில்வே பெண் காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

புறநகர் ரயில்களில் ஓடும் போது ஏறி பலரும் விபத்தில் சிக்கியுள்ளதை பார்த்திருப்போம். புறநகர் ரயில்கள் உடனே வேகமாக செல்லும். அடுத்த 5 முதல் 10 வினாடியில் முழு வேகத்தை எட்டும் திறன் உடையவை. அப்படி இருக்கும் போது, ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பது ஆபத்தையே விளைவிக்கும்.

cctv: RPF lady staff saved a woman passenger at Bandra station who slipped while boarding a moving train

இதுபற்றி அரசு முறையான எச்சரிக்கையை பலமுறை கொடுத்துள்ளது. ஆனால் மக்கள் அந்த ரயிலை விட்டுவிட்டால் மீண்டும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டுமே என்ற பதற்றத்தில் ஏறுகிறார்கள். இதனால் ஓடும் ரயில்களில் ஏறும் மக்கள் விபத்தில் சிக்கி கை கால்களை இழக்கிறார்கள் அல்லது உயிரையே இழக்கிறார்கள்.

அதேநேரம் ரயில் நிலையங்களில் இருக்கும் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு, பயணிகளை காப்பாற்றும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்ட மேற்கு ரயில்வே வெளியிட்ட ட்வீட் பதிவில், மும்பை பாந்த்ரா புறநகர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியின் உயிரை ஆர்பிஎப் பெண் ஊழியர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ வேண்டாம் என்று அனைத்து பயணிகளுக்கும் மேற்கு காவல்துறை வேண்டுகோள் விடுக்கிறது, அது ஆபத்தானது" இவ்வாறு அந்த பதிவில் மேற்கு ரயில்வே கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+