உடைந்த சத்ரபதி சிவாஜி சிலை.. காலணியால் அடிக்கும் போராட்டம் நடத்திய சிவசேனா, என்சிபி, காங்கிரஸ்!
மும்பை: மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததைக் கண்டிக்கும் வகையில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடியினர் இன்று அம்மாநிலம் முழுவதும் காலணியால் அடிக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவாஜி சிலை உடைந்து விழுந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைவணங்கி மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் 35 அடி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பிரம்மாண்ட சிலை திடீரென உடைந்து விழுந்தது மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான பணி ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சிவாஜியின் பாதத்தை 100 முறை தொட்டு மன்னிப்பு கேட்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, தலைவணங்கி மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரும் மன்னிப்பு கோரினார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கின்றன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடியினர் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் காலணியால் அடிக்கும் போராட்டத்தை நடத்தினர். பிரம்மாண்டமான காலணிகளை கைகளில் ஏந்திய படி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. மும்பை இந்தியா கேட் முன்பாக உள்ள சிவாஜி சிலை அருகே இப்போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே- துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்டோர் படங்களை காலணியால் அடித்தனர்.

இந்தப் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார். மேலும் மகா விகாஸ் அகாடியும் காங்கிரஸ் தலைவர்களும் ஒருபோதும் சத்ரபதவி சிவாஜிக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. தமது டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தில் சிவாஜியை அவமரியாதை செய்தவர் நேரு. இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா? மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் சிவாஜி சிலை இடிக்கப்பட்டது சூரத் மாநகரை சிவாஜி கொள்ளையடித்தார் என பாடம் கற்பித்ததே காங்கிரஸ் கட்சிதானே. இதற்கு எல்லாம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா? என்றார் தேவேந்திர பட்னாவிஸ்.












Click it and Unblock the Notifications