சீனா டூ பாகிஸ்தான் சென்ற கப்பல்.. உள்ளே அணு ஏவுகணை! மும்பையில் ரவுண்டு கட்டி அதிகாரிகள் பறிமுதல்
மும்பை: பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட சீனாவை சேர்ந்த அணு ஆயுதங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பை நவா சேவா துறைமுகத்தில் கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தன. இது அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக அந்த சரக்கை சோதனையிட்ட போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அதன் உள்ளே இருந்தது அணு ஆயுதங்களை சுமந்து கண்டம் விட்டு கண்டும் பாய்ந்து தாக்கி அழிக்கும் ஏவுகணை.

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி மால்டா நாட்டு கொடி பொருத்தப்பட்ட கப்பல் பாகிஸ்தானின் கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. மும்பை நவ சேவா துறைமுகத்திற்கு வந்த அந்த கப்பலை சந்தேகத்தின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு இருக்கிறார்கள். அப்போதுதான் அதில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரி நாடுகளை தாக்கி அழிக்கும் பலிஸ்டிக் மிசைல் என்று சொல்லப்படும் ஏவுகணை இருந்தது தெரியவந்தது.
பரபரப்பானது மும்பை துறைமுகம்.. சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அழைத்தனர். கராச்சி நோக்கி சென்றது அணு ஏவுகணை தான் என்பதை உறுதி செய்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுங்கத்துறை உதவியுடன் அதனை பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள ஷேக்காவ் துறைமுகத்தில் இருந்து இந்த கப்பல் புறப்பட்டு வந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த சிஎன்சி கருவிகள் கணினியின் மூலமாக இயக்கப்படுபவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் வந்தவர்களின் ஆவணங்களை வாங்கி பரிசோதனை செய்த இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிவப்புக் கொடி காட்டியுள்ளனர். அவர்கள் காட்டிய ஆவணங்களில் இது சீனாவின் ஷாங்காய் ஜே.எஸ்.இ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்திருக்கும் பாகிஸ்தான் விங்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்ற கப்பலில் ராணுவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை சென்று சேரும் பாகிஸ்தான் விங்க்ஸ் என்ற நிறுவனத்தின் இணையதளத்தை ஆராய்ந்தபோது, அது ஒரு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் லாஜிஸ்டிக் நிறுவனம் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆய்வில் இறங்கிய போது 22,180 கிலோ எடை கொண்ட இந்த சரக்கு சீனாவின் தயுவான் என்ற நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பாகிஸ்தானில் இதை பெறும் நிறுவனத்தின் பெயர் காஸ்மோஸ் இன்ஜினியரிங். இந்த காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம்தான் பாகிஸ்தானுக்கு ராணுவ உபகரணங்களை வழங்கி வருகிறது.
அந்தப் பெயரை மறைத்து பாகிஸ்தான் விங்ஸ் என்ற பெயரிலேயே இது அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் விங்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இதுபோன்று ராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்து வருவதாக பல நாட்களாக இந்திய அதிகாரிகள் சந்தேகித்து வந்திருந்த நிலையில் இது தற்பொழுது உறுதியாகி இருக்கிறது. இந்த நிறுவனம் தடை செய்யப்பட்ட பல்வேறு உபகரணங்களை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக சீனா, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாக உபகரணங்கள் வருகின்றன." என்று குறிப்பிட்டு உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications