ரூ.4,000 கோடி வசூல்? ஆர்ஆர்ஆர், பாகுபலியைவிட அதிகம்: 1960 இல் 15 கோடி டிக்கெட் விற்பனை
மும்பை: சுமார் 60 ஆண்டுகள் முன்பாக வெளியான திரைப்படம் ஒன்று சுமார் 4 ஆயிரம் கோடியை வசூல் செய்துள்ளது என்றும் அந்தச் சாதனை பாகுபலி, ஜவான், ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் வசூல் வேட்டையைக் காட்டிலும் அதிகமானது என்றும் தெரியவந்துள்ளது.
இந்திய சினிமாவின் வெற்றி என்பது அதன் நல்ல கதையம்சத்தை வைத்து முடிவு செய்யப்படுவதில்லை என்பது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஒரு படம் பாக்ஸ் ஆபீசில் எத்தனை கோடிகளை வாரி குவிக்கிறது என்பதைப் பார்த்துத்தான் இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் உலக அளவில் 1300 கோடியை வசூல் செய்ததுடன் நடனத்திற்கான ஆஸ்கர் விருதையும் பெற்று உலக அரங்கில் கால் பதித்தது.

அதேபோல் 2023 ஆம் ஆண்டு வெளியான 'ஜவான்' இந்தியாவில் மட்டும் 400 கோடிக்கு மேல் வசூலித்தது. உலக அளவில் இதன் வசூல் 1145 கோடி என்கிறார்கள். இந்தியத் திரைப்படத்தில் கதையம்சமும் அதன் வசூல் வேட்டையும் சேர்ந்து அமைவது அரிதான விசயம். அப்படி ஒரு படத்திற்கு அமைந்தது என்பது கடந்தகால சரித்திரம். ஆமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 2 ஆயிரம் கோடியை வசூல் செய்ததாகச் சொல்லப்பட்டது.
இந்திய மொழிகளில் மட்டும் 538 கோடியை ஈட்டியது. இந்தச் சாதனையை முறியடிக்க ஒருத்தன் இனிமேல் பிறந்து வர பல ஆண்டுகள் ஆகும் எனச் சொல்லப்பட்ட போதுதான் 2017இல் 'பாகுபலி' வந்தான். இந்தப் படம் உலகம் முழுக்க 2400 கோடியை வசூல் செய்தது.
இந்த பில்ட் அப் எல்லாம் இப்போது எதற்கு எனச் சிலர் யோசிக்கலாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இன்று இந்திய சினிமா என்பது பான் இண்டியா சினிமா என்ற டேக் போட்டு வெளியாவது ஒரு ஃபேஷனாகவே இருக்கிறது. இந்தக் கலாச்சாரம் தலைதூக்குவதற்கு முன்பே கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் முன்பே பான் இண்டியா திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் அப்படி ஒரு திரைப்படம் என்று சொன்னால் சந்திரலேகா. ஜெனிமி நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படம் பாலிவுட் லாலாக்களை நடுநடுங்க வைத்தது.
இப்போது நாம் சொல்லப் போவது சந்திரலேகா பற்றி அல்ல. அதற்கும் மேலான வசூலைக் கொட்டிக் குவித்த ஒரு திரைப்படத்தைப் பற்றித்தான். அந்தப் படம் பாகுபலியோ, தங்கலோ, ஏன் ஷோலேவோ கூட அல்ல. நாம் குறிப்பிட்டுச் சொல்லும் படம் கடந்த 64 வருடங்களுக்கு முன்பு வெளியானபோது 15 கோடி டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதாவது ஜவான், ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களைவிட 3 மடங்கு இது அதிகம்.
இன்றைய நிலவரப்படி ஒரு சினிமா டிக்கெட்டின் விலை சராசரியாக 130ரூபாய். மல்டிபிக்ஸ் தியேட்டரிகளில் விற்பனையாகும் டிக்கெட்டுகளின் விலையை நாம் இதில் சேர்க்கவில்லை. அங்கே இதைவிட 2 மடங்கு விலை அதிகம். 5 மடங்கு அளவுக்கு விலையை ஏற்றி, அதன் மூலம் 1 கோடி டிக்கெட்டுகளை விற்று அதிக வசூலைக் காட்டுவது சாதனை அல்ல. பாமர மக்கள்கூட பார்க்கும் அளவுக்கு டிக்கெட் கட்டணத்தை வைத்து மாபெரும் வசூலைக் காட்டுவதுதான் மிகப்பெரும் சாதனை.

அப்படி ஒரு படம் இந்திய சினிமா வரலாற்றில் வசூலைச் செய்தது. இன்றைக்கு அந்தப் படத்தின் டிக்கெட் விற்பனையை வைத்து தோராயமான ஒரு கணக்குப் போட்டால் சுமார் ரூ.3650 கோடியை வசூலித்த 'கிளாசிக்' திரைப்படம் அதுதான்.
ஏன் அய்யா கொல்லுற? அது எந்தப் படம் என்று சொல்லுயா? என நீங்கள் கொந்தளிப்பது புரிகிறது? கே ஆசிப் இயக்கத்தில் வெளியான முகல்-இ-ஆசம் என்ற திரைப்படம்தான் அது. இது 1960இல் வெளியானது. இந்தப் படம் உலக அளவில் ரூ.11 கோடியை வசூல் செய்தது. அந்தக் காலத்தில் சராசரி ஒரு டிக்கெட் விலை ஒரு ரூபாய்க்கும் குறைவு. இன்றைய பண மதிப்புடன் ஒப்பீட்டு கணக்கிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பு ரூ. 4000 கோடி.
முகல்-இ-ஆஜாம் படம் உலகம் முழுவதும் 15 கோடி டிக்கெட்டுகள் விற்றன என்கிறது ஒரு புள்ளிவிரவம். இது இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியாத எண்ணிக்கையாகும். ஜவான் 5 கோடி டிக்கெட் விற்றுள்ளது. முகல்-இ-ஆஜாம் மீதான மோகம் அதிகமாக இருந்ததால், மும்பையின் மராத்தா மந்திரில் சில டிக்கெட்டுகள் பிளாக்கில் ரூ.100 வரை விற்கப்பட்டன. இன்றைக்கு இதன் மதிப்பு ரூ.9000 வரலாம்.
இந்த பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பெறும் இரண்டாவது கிளாசிக் திரைப்படம், ஷோலே. 1975 இல் வெளியான இது ரூ.30 கோடியை வசூலித்தது. இன்றைய பண மதிப்பு சுமார் ரூ.3090 கோடி. அப்படிப் பார்த்தால் ஆமீர்கானின் தங்கல் உலகளாவிய வசூல் ரூ.2000 கோடிதான். பாகுபலி, மதர் இந்தியா, ஹம் ஆப்கே ஹைன் கோன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஆவாரா என இவற்றைவிட அதிகம். 1970களில் வெளியான டிஸ்கோ டான்சர் ரூ.1820 கோடியையும் பாபி ரூ.1700 கோடியையும் வசூல் செய்தன. சோவியத் ரஷ்யாவில் வெற்றி பெற்ற இரண்டு இந்தியத் திரைப்படங்கள் இவைதான்.
இந்தியாவை பொறுத்தவரை இன்றைய பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களில் வெளிப்படைத் தன்மை மிகமிக குறைவு என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பாலான இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் சிறப்பான வசூலைச் செய்கிறன. ஆனால், அங்குப் பண மதிப்பு இந்தியாவிலிருந்து வேறுபட்டுள்ளது. இதை அனைத்தையும் கணக்கில் கொண்டு இந்தக் கட்டுரை ஒரு மதிப்பீட்டை வழங்கி இருக்கிறது.
உதாரணமாக, 1960இல் வெளியான ஒரு படம் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளது என வைத்துக் கொண்டால், அதன் மதிப்பு இன்றைக்கு சுமார் ரூ.330-380 கோடிக்குச் சமமாகும். ஆனால், 1995 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப் படம், இதே பணமதிப்பைப் பெற வேண்டும் எனில் ரூ.35 முதல் 40 கோடி சம்பாதிக்க வேண்டும். அப்படியான ஒரு மதிப்பீட்டில்தான் முகல்-இ-ஆஜாம் கிட்டத்தட்ட இன்றைய பணமதிப்பு படி சுமார் 4 ஆயிரம் கோடியை வசூல் செய்துள்ளது என்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications