ஆணுறை.. அதுவும் சுடசுட சமோசாவுக்குள்ளே.. "அது" வேற இருந்துச்சாமே? போலீசுக்கு ஒரே ஓட்டம்.. அடக்கடவுளே
மும்பை: குஜராத் மாநிலம், வதோராவில் ஏற்பட்ட சமோசா பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. அதற்குள் இன்னொரு சமோசா பஞ்சாயத்து ஆரம்பமாகி உள்ளது.
குஜராத்தில் சிப்வாட் என்ற பகுதியில், ஹுசைனி சமோசா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த சமோசாவில் மாட்டிறைச்சி கலந்து விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைக்கவும், அவர்கள் விரைந்து கடையில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது நிஜமாகவே பல நூறு கிலோ மாட்டிறைச்சி நிரப்பப்பட்ட சமோசாக்களை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

மட்டன் விலை: இங்கு தயாராகும் மாட்டிறைச்சி சமோசாக்கள், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.. ஆனால், மாட்டிறைச்சி சமோசா என்று தெரியாமலேயே, நகரம் முழுவதும் பலரும் இதை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்..
மட்டன் விலை எகிறிவிட்டதால், ஆட்டுக்கறியை அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியவில்லையாம். அதனால்தான் பசு மற்றும் எருமை இறைச்சியை கலந்து சமோசா தயாரித்து வந்ததாக சொல்கிறார்கள்.. இப்போது 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா: இப்படிப்பட்ட சூழலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் நடந்த சம்பவம் அதற்கு மேல் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது. புனேவில் பிம்பாரி சின்ச்வாட்டில், கேட்டலிஸ்ட் சர்வீஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தினர், தங்களுக்கு சமோசாக்கள் வேண்டும் என்று ஒரு பிரபல கேட்டரிங் சர்வீசுக்கு ஆர்டர் செய்துள்ளார்கள்.. பிறகு சிறிது நேரத்தில், ஆர்டர் செய்யப்பட்ட சமோசாக்களும் வந்தன. அந்த சமோசாக்களை சாப்பிட முயன்றபோது அதில் ஆணுறைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அந்த சமோசாவுக்குள் குட்காவும் இருந்திருக்கின்றன..
ஆணுறை: இதைத்தவிர, சின்ன சின்ன கற்களும் சமோசாவில் இருந்துள்ளன.. இதனால், அதிர்ந்துபோன நிறுவனம், சமோசாவை எடுத்துக்கொண்டு போலீஸுக்கு ஓடியது.. இறுதியில், சம்பந்தப்பட்ட ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக், ஃபிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணையையும் துவங்கினார்கள்.
அப்போதுதான், தொழில் போட்டி காரணமாக இப்படி ஒரு அசிங்கத்தை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. அதாவது, மனோகர் என்டர்பிரைசஸ் என்பது ஒரு காட்டரிங் சர்வீஸ் கம்பெனியாகும். எஸ்ஆர்ஏ என்டர்பிரைசஸ் என்பது இன்னொரு காட்டரிங் சர்வீஸ் கம்பெனியாகும். இவர்கள் 2 பேருக்கும்தான் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.
போட்டி, பொறாமை: பெரிய நிறுவனத்துக்கான உணவுகளை கான்ட்ராக்ட் எடுப்பதில், இந்த 2 கேட்டரிங் கம்பெனிகளுக்குள் நடுவே நீண்ட காலமாகவே, போட்டி, பொறாமைகள் இருந்து வந்திருக்கின்றன.. அந்தவகையில், ஆட்டோமொபைல் நிறுவனத்துக்கும், யார் உணவு வழங்குவது என்ற போட்டி எழுந்துள்ளது.. இதில் மனோகர் என்டர்பிரைசஸ் கம்பெனிக்கு வாய்ப்பு கிடைத்து, ஒப்பந்தமும் போடப்பட்டுவிட்டது.
தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், எஸ்ஆர்ஏ போட்டி நிறுவனம் சதிச்செயலில் இறங்க முடிவு செய்திருக்கிறது. இதற்காகவே தன்னுடைய ஊழியர்களில் சிலரை, மனோகர் என்டர்பிரைசஸ் உணவு நிறுவனத்துக்கு ஒப்பந்த ஊழியராக அனுப்பி வைத்திருக்கிறது.. அந்த நபர்களை வைத்தே, ஆட்டோமொபைல் நிறுவனத்துக்காக தயாரான சமோசாக்களில் ஆணுறை, குட்கா மற்றும் சிறு கற்களை கலந்துவிட்டுள்ளது. அப்படித்தான் அந்த 5 விசுவாச ஊழியர்களும் இப்போது சிக்கியிருக்கிறார்கள்..
அசிங்கம்: போட்டி நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க முயன்று, கடைசியில் எஸ்ஆர்ஏ என்டர்பிரைசஸ் மொத்தமாக அசிங்கப்பட்டுவிட்டது... கெடுவான் கேடு நினைப்பான் என்பது உண்மைதானே?!!!












Click it and Unblock the Notifications