மகாராஷ்டிராவில் பாஜக வெல்வது ஈஸி இல்லை.. ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும் ‘இந்தியா’ கூட்டணி.. ABP கணிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு இந்தியா கூட்டணி 'டஃப் ஃபைட்' கொடுக்கும் என ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய 2024 லோக்சபா தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் டஃப் ஃபைட்: மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரை மொத்தம் 48 எம்.பி தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 20 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் நான்கு இடங்களை வெல்லும் என்றும், அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் ஆகிய கட்சிகள் இணைந்து 16 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 41 இடங்களில் வென்றிருந்தது. என்.டி.ஏ கூட்டணியில் சிவசேனா 18, பாஜக 23, தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 5 இடங்களில் வென்றிருந்தது. அசாதுதீவ் ஓவைசி கட்சி கூட்டணி 1 இடத்தில் வென்றது.
2019ல் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் சிவசேனா இரண்டாக பிளவு பட்டுள்ளது. ஷிண்டே அணி பாஜகவுடனும், உத்தவ் தாக்கரே அணி தற்போது இந்தியா கூட்டணியிலும் உள்ளது. அதேபோல, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் சந்திர பவார் அணி இந்தியா கூட்டணியிலும், அஜித் பவார் அணி பாஜக கூட்டணியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் வோட் ஷேரிங்கை பொறுத்த வரையில், பாஜக தலைமையிலான கூட்டணி 42.7 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 42.1 சதவீத வாக்குகளையும் பெறும் என ஏபிபி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 41.5 சதவீதம் பேர் மிகவும் திருப்தியாக இருப்பதாகவும், 29.47 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தியாக இருப்பதாகவும், 27.07 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் யாரை அடுத்த பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தவர்களில் 58.83 சதவீதம் பேர் நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை பிரதமராக நீடிக்க வேண்டும் என்றும், 28.83 சதவீதம் பேர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications