காங்கிரஸில் களைகட்டிய கலகம்..டெல்லியில் பஞ்சாயத்து பேசும் ராகுல் காந்தி! 19-ம் தேதி வெளியாகும் ரிசல்ட்?
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இன்று டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இதற்கிடையே இன்றைய கூட்ட முடிவுகளை தெரிவிக்கும் வகையில், 19ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு சென்னையில் நடக்கவுள்ளது.
தமிழக அரசியல் நிலவரம், திமுக கூட்டணியில் காங்கிரஸின் எதிர்காலம், தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு கோரல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் இன்று மாலை 4 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர், முன்னாள் மாநிலத் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியின் துணை அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கலகம்
கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வெற்றிப் பெற்றுள்ள நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என இரு கட்சித் தலைமைகளும் அறிவித்துள்ளன. அதன்படி, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக இரு தரப்பிலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகத் தோன்றத் தொடங்கியுள்ளன.
திமுக காங்கிரஸ் பதற்றம்
ஒரு அணியினர் திமுக கூட்டணியை தொடர வேண்டும் என வலியுறுத்தும் நிலையில், மற்றொரு அணியினர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விவகாரம் கட்சிக்குள் உள்கட்சி பூசலை அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் இளைஞர்கள் பெருமளவில் திரள்வதால், அவரது அரசியல் வருகை தமிழக அரசியலில் புதிய கணக்குகளை உருவாக்கி வருகிறது.
நடிகர் விஜய்
ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் காங்கிரஸ் தேர்தல் உத்திகள் குழு நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, சமீபத்தில் விஜயை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. இதன் பின்னணியில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில தலைவர்கள் ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி ஆலோசனை
இருந்தபோதிலும், மாணிக்கம் தாகூர் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக நேர்காணல்களில் தனது கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது திமுக-காங்கிரஸ் உறவுகளில் மறைமுக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் சட்ட சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததும் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில், தமிழக காங்கிரஸில் ஒரு அணியினர் திமுக கூட்டணியைத் தொடர விரும்பும் நிலையில், மற்றொரு அணியினர் தவெகவுடன் புதிய அரசியல் பாதையைத் தேட விரும்புவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் செயற்குழு - பொதுக்குழு
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து முக்கிய தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்துவது அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 19-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல், கூட்டணி உறவுகள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
சீட் ஒதுக்கப்பட்ட பிறகு அப்செட்.. அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்? புரட்சி பாரதம் இன்று முடிவு! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications