முகமது ஷமி நோன்பு இருக்காதது பாவமா? காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது ஆதரவு.. அந்த விதியை மறக்காதீங்க!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ரமலான் மாதத்தில் நோன்பு இருக்காதது கிரிமினல் குற்றம் என்று விமர்சித்த அனைத்திந்திய இஸ்லாமிய ஜமாத் அமைப்பின் தலைவர் பரேல்விக்கு காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது பதிலடி கொடுத்துள்ளார். இஸ்லாமியர்கள் பயணத்தில் இருக்கும் போது நோன்பு இருக்க தேவையில்லை என்று கூறிய ஷாமா முகமது, அதிக உடல் உழைப்பை கோரக்கூடிய விளையாட்டை ஷமி விளையாடி வருவதாகவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து கடமையை செய்து வருகின்றனர். இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போது எனர்ஜி டிரிங்க் ஒன்றை குடித்தார்.

அதிக ஓவர்களை வீசியதால் தாகத்தை தணிக்கும் வகையில் முகமது ஷமி எனர்ஜி டிரிங்கை குடித்தார். இஸ்லாமியரான முகமது ஷமி, கிரிக்கெட் விளையாடி வருவதன் காரணமாக நோன்பு இருக்காதது தெரிய வந்தது. ஆனால் இஸ்லாமியர் அமைப்புகள் முகமது ஷமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளர். நோன்பு இருக்காததை கிரிமினல் குற்றம் என்று அனைத்திந்திய இஸ்லாமியர் ஜமாத் அமைப்பின் தலைமர் பரேல்வி விமர்சித்தார்.
இஸ்லாத்தில் நோன்பு இருப்பது ஒரு கடமை என்று கூறிய அவர், வேண்டுமென்றே நோன்பை தவிர்த்தால், அவர்கள் பாவம் செய்தவர்களாக கருதப்படுவார்கள். முகமது ஷமி வேண்டுமென்றே நோன்பு இருப்பதை தவிர்த்துள்ளார். இதனால் அவர் ஒரு கிரிமினல் என்று விமர்சித்துள்ளார். நாட்டுக்காக விளையாடும் வீரரை இப்படி விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முகமது ஷமிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் ஷாமா முகமது கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஷாமா முகமது பேசுகையில், இஸ்லாத்தில் ரமலானின் போது முக்கியமான விஷயம் பின்பற்றப்படும். யாராவது பயணத்தில் இருந்தால், அவர்கள் நோன்பு இருக்க தேவையில்லை. முகமது ஷமி இப்போது பயணத்தில் தான் இருக்கிறார். அதேபோல் அவர் சொந்த வீட்டில் இப்போது இல்லை.
அதுமட்டுமல்லாமல் முகமது ஷமி உடல் உழைப்பை கோரும் விளையாட்டை விளையாடி வருகிறார். ஒரு விளையாட்டினை விளையாடும் போது நீங்கள் நோன்பு இருந்தே ஆக வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் நோன்பு இருப்பதை விடவும் அதனை தவிர்த்தால், என்ன செயல்களில் ஈடுபடுகிறோம் என்பதும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர் ஷாமா முகமதின் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன் ஷாமா முகமது, ரோஹித் சர்மா ஃபிட்னஸில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஈர்ப்பே இல்லாத ஒரு கேப்டன் ரோஹித் சர்மா என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications