உலகம் முழுவதும் மீண்டும் வீரியமாக பரவும் கொரோனா...50,57,37,876 பேர் பாதிப்பு - 62,27,273 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 50,57,37,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 45,54,67,998 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,27,273 பேர் உயிரிழந்துள்ளனர்
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 50,57,37,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 45,76,55,861 பேர் மீண்டுள்ளனர். 62,27,273 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 4,18,54,742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா உலகம் முழுவதையும் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது கொரோனா இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெளி நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது.
எக்ஸ் இ வகை புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 5,75,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 50,57,37,876 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 11,39,215 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 45,76,55,861 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஒரே நாளில் 2,183 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் இன்றைய தினம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 62,27,273 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால் உலகின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் 25,465 பேர் புதிதாக ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 1,30,759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 1,18,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் 28,282 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இத்தாலி நாட்டில் 27,214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 1,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,22,001 பேராக அதிகரித்துள்ளது. கேரளா, டெல்லி, ஹாரியனாவில் தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications