வருகிறது கொரோனா 3ம் அலை.. இன்னும் 2-4 வாரங்களில் மகாராஷ்டிராவில் தொடங்கும்.. டாஸ்க் போர்ஸ் வார்னிங்!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாம் அலை இன்னும் 2-4 வாரங்களில் ஏற்படலாம் என்று அம்மாநில அரசின் டாஸ்க் போர்ஸ் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக தாக்கியதை அடுத்து, தற்போது இரண்டாம் அலை உச்சத்தை கடந்து கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் இன்னும் போதிய அளவு வேக்சின் போடப்படாத நிலையில் மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தோன்றும் அபாயம் உள்ளது.
இரண்டாம் அலையை போலவே மூன்றாம் அலையும் அதிக ஆபத்து கொண்டதாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. அதேபோல் புதிய உருமாறிய கொரோனா பரவுவதால் கேஸ்களும் அதிகம் வரலாம் என்று அஞ்சப்படுகிறது.

எப்படி
பொதுவாக ஒரு அலை தாக்குதலுக்கு பின் அதிகபட்சம் 100 நாட்கள் இடைவெளியில் அடுத்த அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாம் அலை இன்னும் 2-4 வாரங்களில் ஏற்படலாம் என்று அம்மாநில அரசின் டாஸ்க் போர்ஸ் எச்சரித்துள்ளது. மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் நடந்த மீட்டிங்கில் டாஸ்க் போர்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வாய்ப்பு இல்லை
ஆனால் இந்த அலையில் குழந்தைகள் பாதிப்படைவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று அந்த டாஸ்க் போர்ஸ் கூறியுள்ளது. இதன் மூலம் புதிய பல கிளஸ்டர் தோன்றலாம், இரண்டாம் அலையை விட இரண்டு மடங்கு கேஸ்கள் மூன்றாம் அலையில் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவ்
ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை மட்டும் 8 லட்சம் வரை செல்லும் என்று கூறியுள்ளனர். 10% கேஸ்கள் சிறுவர், சிறுமியராக இருக்க வாய்ப்புள்ளது. முதல் இரண்டு அலையிலும் இதே அளவு பாதிப்புதான் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் அலை உச்சம் குறித்து இப்போது கணிக்க முடியாது.

உச்சம்
மக்கள் வெளியே செல்வதும், கூட்டமாக கூடுவதாலும் கண்டிப்பாக மூன்றாம் அலை ஏற்படும். இது கேஸ்களை அதிகரிக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா இதுவரை ஏற்படாதவர்கள், அல்லது ஆண்டிபாடி இல்லாதவர்கள் இந்த 3ம் அலை கொரோனா காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று டாஸ்க் போர்ஸ் எச்சரித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications