பிஞ்சுகளை தாக்கும் ஓமிக்ரான்.. மகாராஷ்டிரா, கர்நாடகாவில் "அந்த" கேஸ்களை நோட் பண்ணீங்களா? கவனம்!
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பதிவாகி இருக்கும் சில ஓமிக்ரான் கேஸ்கள் இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. வயது குறைவானவர்கள் பலர் இந்தியாவில் ஓமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 33 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவானது. நேற்று நாடு முழுக்க மொத்தம் 122 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவானது.
இந்தியாவில் இதனால் மொத்த ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க ஓமிக்ரான் காரணமாக கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 88 ஆக உள்ளது. டெல்லியில் இதுவரை 64 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தெலுங்கானாவில் 38 பேர் ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேர் ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் 32, குஜராத்தில் 30 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கவலை தரும் விஷயம்
இதில் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால் நேற்று மகாஷ்டிராவில் பதிவான 23 கேஸ்களில் 4 கேஸ்கள் 18 வயதுக்கும் குறைவான நபர்கள் ஆவர். ஆம் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் இவர்கள் வேக்சின் போடவில்லை. இந்த நிலையில் இவர்களுக்கு நேற்று ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. எல்லோரும் லோக்கல் காண்டாக்ட் கேஸ்கள்.

குஜராத்
இன்னொரு பக்கம் குஜராத்தில் நேற்று 7 கேஸ்கள் பதிவானது. இதில் 3 கேஸ்கள் 18 வயதுக்கு குறைவான நபர்கள் ஆவர். டெல்லியில் இதுவரை 64 பேர் ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் வரை 18 வயதுக்கு குறைவானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகாவில்
கர்நாடகாவில் நேற்று 13 கேஸ்கள் பதிவானது. இதனால் மொத்த பாதிப்பு 32 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 2 பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள். 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு கர்நாடகாவில் நேற்று ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி வரிசையாக இந்தியாவில் இளம் பிஞ்சுகள், இளைஞர்கள் ஓமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

எதிர்ப்பு சக்தி
தொடக்கத்தில் எதிர்ப்பு குறைவானவர்களை தாக்கும் என்று கருதப்பட்ட ஓமிக்ரான் தற்போது நல்ல எதிர்ப்பு சக்தி கொண்ட 18 வயதுக்கும் குறைவான நபர்களை தாக்க தொடங்கி உள்ளனர். இந்தியாவில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு வேக்சின் போடப்படவில்லை என்பதால் இவர்களிடம் பரவல் அதிகம் ஆகியுள்ளது. இது இளைஞர்கள், குழந்தைகள் இடையே அலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
Recommended Video

அபாயம்
ஏற்கனவே வேக்சின் போட்டவர்கள் ஓமிக்ரானை உடலில் சுமந்து கொண்டு அதை தங்கள் வீட்டு குழந்தைகளிடம் பரப்பும் அபாயமும் இதனால் ஏற்பட்டுள்ளது. எனவே 18 வயது குறைவானவர்களுக்கு இப்போதே வேக்சின் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உடனே இவர்களுக்கான வேக்சினேஷன் டிரைவை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் மக்கள் மாஸ்க் அணிவது, சானிடைசர் மூலம் அடிக்கடி கை கழுவுவது போன்ற நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications