பார்முலா இதுதான்.. சரியாக நாம் புக் செய்ய போகும்போது மட்டும் விமான டிக்கெட் உச்சத்திற்கு போவது ஏன்?
மும்பை: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் விமான டிக்கெட் விலை உச்சத்தில் இருக்கும். விமான டிக்கெட் விலை இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம்.. இந்தியாவில் விமான டிக்கெட் விலை அதிகமாக இருப்பது ஏன் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசத்தில் இப்போது மகா கும்பமேளா நடைபெற்று வரும் சூழலில் அங்குச் செல்ல விமான டிக்கெட் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது.

விமான டிக்கெட்:
சென்னை, பெங்களூர் என எந்தவொரு முக்கிய நகரில் இருந்தும் பிரயாக்ராஜ் செல்ல டிக்கெட் ரேட் உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி விமான நிறுவனங்களைக் கண்காணிக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இதில் தலையிட வேண்டி இருந்தது. இந்த சமயம் மட்டுமில்லை.. பொங்கல், தீபாவளி என ஒவ்வொரு சமயத்திலும் இதேபோல விமான டிக்கெட் உயரும். மத்திய அரசு தலையிட வேண்டி இருக்கும். ஒவ்வொரு முறையும் விமான டிக்கெட் விலை இந்தளவுக்கு உயர என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வல்லுநர்கள் சொல்வது என்ன:
இந்தியாவின் விமான சந்தை குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டில் பல விமான நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இப்போது ஏர் இந்தியாவை டாடா வாங்கிவிட்டனர். விஸ்தாரா ஏர் இந்தியாவுடன் இணைந்துவிட்டது. கோ ஏர் முடங்கிவிட்டது. ஸ்பைஸ்ஜெட் தனது செயல்பாட்டைக் கணிசமாகக் குறைத்துவிட்டது. இதனால் இப்போது மார்க்கெட்டில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா மட்டுமே உள்ளன. அவர்கள் தான் சந்தையை 90% கட்டுப்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் வைப்பது தான் விலை என்ற சூழல் உருவாகிவிட்டது" என்றார்.
ஏர் இந்தியா அரசிடம் இருந்த வரை விலையில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. அதாவது ஏர் இந்தியா குறிப்பிட்ட ரேட்டை தாண்டி நிர்ணயம் செய்யாது. இதனால் தனியார் நிறுவனங்களால் அதைவிட ரொம்ப அதிக விலையை நிர்ணயம் செய்ய முடியாது. ஆனால், ஏர் இந்தியா தனியார் வசம் சென்ற பிறகு டிக்கெட் விலையைக் கட்டுக்குள் வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
விமான சந்தை:
சில ஆண்டுகளில் இந்தியாவில் விமான சந்தை மொத்தமாக மாறிவிட்டது. ஏர் இந்தியாவை டாடா வாங்கும் போது இந்தியாவில் 5 மேஜர் நிறுவனங்கள் இருந்தன. முதலில் கோ ஏர் நிதி சிக்கல் காரணமாகச் செயல்பாடுகளை முடக்க வேண்டி இருந்தது. தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் விமானமும் தனது சேவையை வெகுவாக குறைத்தது. விஸ்தாரா ஏர் இந்தியா உடன் இணைந்துவிட்டது. இண்டிகோ மற்றும் ஏர் இந்தியாவுக்கு இடையே மாட்டிக்கொண்டு ஆகாஸா ஏர் நிறுவனத்தால் மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
நமது நாட்டில் விமானப் பணிகள் அதிகரித்து வரும் சூழலில், அதைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு விமானங்கள் இல்லை. இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை அதிகளவில் விமானங்களை ஆர்டர் செய்துள்ள போதிலும், அவை டெலிவரி ஆகக் காலதாமதம் ஆகிறது. இதனால் விமானத்தில் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் டிக்கெட் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவும் விமான டிக்கெட் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
முக்கிய காரணம்:
எல்லாவற்றையும் விட விமான டிக்கெட் விலையைக் கண்காணிக்கவும் வரைமுறைப்படுத்தவும் எந்தவொரு அரசு அமைப்பும் இல்லை. அதாவது நம்ம ஊரில் பஸ் டிக்கெட் விலையை அரசே நிர்ணயம் செய்யும். இதனால் குறிப்பிட்ட ரேட்டிற்கு மேல் விமான டிக்கெட் விலையை உயர்த்த முடியாது. ஆனால், விமானத்திற்கு அப்படி இல்லை. அவர்கள் நிர்ணயம் செய்வது தான் ரேட் என்றே இருக்கும். இதுபோல அரசு கண்காணிக்கும் அமைப்பு இல்லாமல் போவதும் கூட விமான டிக்கெட் விலை உச்சத்திற்குச் செல்ல முக்கிய காரணமாக உள்ளது.
இதுபோல பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே விமான டிக்கெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. பொதுவாக நாம் பண்டிகை நாட்களில்.. பஸ், ரயிலில் டிக்கெட் கிடைக்காத போது தான் விமான டிக்கெட் பக்கம் போவம்.. இதன் காரணமாகவே பெரும்பாலும் நாம் செக் செய்யும் போது விமான டிக்கெட் அதிகமாக இருப்பது போல நமக்கு இருக்கும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications