ஒரே ஒரு முத்தம் தர முயன்ற நபர்.. பிளாட்பாரத்திலேயே கதறிய இளம்பெண்.. தண்டனையை பாருங்க.. ஜட்ஜ் அதிரடி
பிளாட்பாரத்தில் நின்ற பெண்ணுக்கு முத்தம் தர முயன்ற இளைஞருக்கு தண்டனை தரப்பட்டுள்ளது
மும்பை: ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், 19 வயது இளம்பெண்ணை முத்தமிட முயன்ற நபருக்கு மும்பை கோர்ட் அதிரடியான தண்டனையை விதித்துள்ளது. என்ன நடந்தது?
கடந்த 2018-ல் அரியலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து.. 21 வயதாகிறது.. இவர் 2018, அக்டோபர் மாதம் 13-ம் தேதி, தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே, அதே பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமி வந்து கொண்டிருந்தார்.. சிறுமியை பார்த்ததுமே, ஆசை வார்த்தை சொல்லி, அதே பைக்கில் ஏற்றி கொண்டு கடத்தி சென்றுள்ளார்...

மாரிமுத்து முத்தம்
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, சிறுமிக்கு முத்தம் தந்துள்ளார் மாரிமுத்து.. இதுகுறித்து சிறுமி அழுதுகொண்டே வந்து, தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததை சொல்லி உள்ளார்.. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் மாரிமுத்து மீது புகார் தந்தனர்.. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு, அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு, இதுகுறித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பும் கூறியிருந்தார்.

பைக் சவாரி
அதன்படி, சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக மாரிமுத்துவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.. இந்த தீர்ப்பு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.. பலாத்காரம் என்றில்லாமல், சிறுமிகள் மீது கையை வைத்தாலோ, கடத்தினாலே, வருடக்கணக்கில் ஜெயில் தண்டனையை இப்படித்தான் தர வேண்டும் என்றும் பல தரப்பில் இந்த தீர்ப்புகள் வரவேற்கப்பட்டன.

ரயில்வே ஸ்டேஷன்
இதுபோலவே ஒரு சம்பவம் மும்பையிலும் நடந்துள்ளது.. மும்பையை சேர்ந்த அந்த இளம்பெண், பாந்தராவில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.. அவருக்கு 19 வயதாகிறது.. கடந்த வருடம் ஜுன் 9ம் தேதி மதியம் 1 மணியளவில், இந்த பெண், மும்பையின் விலே பார்லேயில் இருந்து பாந்த்ராவிற்கு சென்று கொண்டிருந்தார்.. காலேஜ் போவதற்காக, கர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, இன்னொரு ரயிலில் ஏறுவதற்காக காத்திருந்தார்.. ரயில் வர நேரமானதால், போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.. அப்போது, பின்னால் வந்த ஒருவர், திடீரென அந்த பெண்ணை முத்தமிட முயன்றான்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், அலறி கூச்சல்போட்டார்..

அலறி கூச்சல்
இந்த சத்தத்தை கேட்டதும், அங்கிருந்த மற்ற பயணிகள், விரைந்து வந்து, இளைஞரை பிடித்து சரமாரியாக அடிக்க தொடங்கினர்.. போலீசுக்கும் தகவல் பறந்து, விரைந்து வந்த அவர்கள், இளைஞரை பாந்த்ரா ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் ஆராயப்பட்டன.. அதில், பெண்ணை முத்தமிட முயலுவதும், அதற்கு பிறகு அந்த நபர், எதுவும் நடக்காததுபோல சர்வ சாதாரணமாக அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவதும் பதிவாகி இருந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354ன் கீழ் (பெண்கள் மீது கிரிமினல் சக்தியை மூர்க்கத்தனமான நாகரீகத்தை ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்தியது) அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்தனர்..

வலுக்கட்டாய முத்தம்
இது தொடர்பான வழக்கும் ஆரம்பமானது.. 3 மாதங்களுக்குள் இந்த வழக்கின் விசாரணையும் முடிவடைந்த விசாரணையில், இறுதியில், மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் பி.கே. கவண்டே, தீர்ப்பையும் தந்துள்ளார்,. அதில், "தகவலறிந்தவரின் சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நோக்கத்துடனும், அறிவுடனும் குற்றவியல் சக்தியை பயன்படுத்தியதாக தெளிவாக காட்டுகிறது என்று கூறி, பிளாட்பாரத்தில் 19 வயது மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்ற 25 வயது இளைஞருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உள்ளார்.. இதையடுத்து இளைஞரை சிறையில் அடைப்பதற்காக கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்...

அத்துமீறல்
சில வருடங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முடிவு கட்டவே போக்சோ சட்டம் இயற்றப்பட்டது.. அதன்படி, போக்சோவில் கைதாகும் குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுவது பொதுமக்களால் வரவேற்கப்பட்டும் வருகிறது. அதேபோல, வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது வரவேற்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில், பெண்களிடம் அத்துமீற நினைப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவே, இந்த மும்பை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பார்க்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மும்பை போன்ற பெருநகர பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பும் தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications