Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

71ஆவது உலக அழகி போட்டி! உலக அழகியானார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா

Subscribe to Oneindia Tamil

மும்பை: 71ஆவது உலக அழகி போட்டியில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா (24) மகுடம் சூட்டினார்.

உலக அழகி போட்டிகள் கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன. 1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு பட்டத்தை தட்டி சென்றார்.

Czech Republic Krustyna Pyzkova become Miss world 2024

இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது.

இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி கூறுகையில், 71ஆவது உலக அழகி இறுதி போட்டியை இந்தியாவில் நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான கலாச்சாரம், அழகிய இந்திய நகரங்களையும் காண நாங்கள் காத்திருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

Czech Republic Krustyna Pyzkova become Miss world 2024

130 நாடுகளில் இருந்து அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லியில் இந்த போட்டி தொடங்கியது. இதன் இறுதி போட்டி நேற்றைய தினம் (மார்ச் 9) நடைபெற்றது. இந்தியாவில் பல நகரங்களில் போட்டியாளர்களின் திறமை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஏற்கெனவே உலக அழகியாக இருப்பவர் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா. இவர் இந்தியாவில் உலக அழகி போட்டி குறித்த விளம்பரப்படுத்தும் பணிகள் உள்ளார்.

Czech Republic Krustyna Pyzkova become Miss world 2024

மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச கண்காட்சி அரங்கில் நேற்று இறுதி போட்டி நடந்தது. உலகம் முழுவதும் இறுதி போட்டி ஒளிபரப்பப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த இறுதி போட்டியை திரைப்பட இயக்குநர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

இந்த இறுதி போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்றிருந்தனர். இந்தியாவை தவிர மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேஷியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், வேல்ஸ், துனிசியா, போட்ஸ்வானா, கவுதமாலா, ஜிப்ரால்டர் நாடுகளை சேர்ந்த அழகிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Czech Republic Krustyna Pyzkova become Miss world 2024

இந்த நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024 ஆம் ஆண்டுக்கான 71ஆவது உலக அழகி பட்டத்தை வென்றார். லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார். இறுதி போட்டியில் வென்ற கிறிஸ்டினாவுக்கு 2021 ஆம் ஆண்டு வென்ற போலாந்து நாட்டு கரோலினா உலக அழகிக்கான மகுடத்தை சூட்டினார்.

இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி போட்டியில் முதல் 4 இடங்களுக்குள் வரவில்லை. இவர் 2022 ஆம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றார். உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறையை இந்தியா வென்றுள்ளது. ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியர்கள் ஆவர்.

Czech Republic Krustyna Pyzkova become Miss world 2024

இந்த விழாவில் முன்னாள் உலக அழகிகளான மனுஷி சில்லர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+