Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாம்பே ஐஐடியில்.. 7-வது மாடியில் இருந்து குதித்து தலித் மாணவர் தற்கொலை.. ஜாதி பாகுபாடு காரணமா?

தர்ஷனுக்கு எதிராக பேராசிரியர்கள், சில மாணவர்கள் ஜாதி பாகுபாடு காட்டியதே அவர் தற்கொலைக்கு காரணம் எனக் கூறினர். எனினும், தற்கொலை குறிப்பு எதையும் தர்ஷன் எழுதி வைக்காததால் போலீஸாரால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியவில

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் உள்ள பாம்பே ஐஐடி நிறுவனத்தில் முதலாமாண்டு படித்து வந்த தலித் மாணவர் ஒருவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட மாணவர் எந்த குறிப்பையும் எழுதி வைக்காத நிலையில், ஐஐடி நிறுவனத்தில் காட்டப்பட்ட ஜாதி பாகுபாடு மற்றும் இழிசொற்களால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பல மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்யாமல் விபத்து வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஐடி தற்கொலைகள்

ஐஐடி தற்கொலைகள்

சென்னை ஐஐடி, பாம்பே ஐஐடி உட்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. பொதுவாக, இதுபோன்ற தற்கொலைகளுக்கு படிப்பு சுமை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், ஜாதி பாகுபாடு, ஆங்கிலப் புலமை இல்லாததால் கிண்டல் கேலிக்கு உள்ளாவது போன்றவை தான் இந்த தற்கொலைகளுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக, சென்னை ஐஐடியில் கடந்த 7 ஆண்டுகளில் 11 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தலித் மாணவர்

தலித் மாணவர்

இந்நிலையில், பாம்பே ஐஐடியில் நேற்று நிகழ்ந்த ஒரு தற்கொலை சம்பவம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், பாம்பே ஐஐடியில் பி டெக் படிப்பில் 3 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். ஐஐடி நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்கி தர்ஷன் படித்து வந்திருக்கிறார்.

7-வது மாடியில் இருந்து..

7-வது மாடியில் இருந்து..

இதனிடையே, கடந்த சில வாரங்களாகவே யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறார் தர்ஷன். முதலாம் செமஸ்டர் தேர்வு சனிக்கிழமையுடன் முடிவடைந்ததால் மாணவர்கள் சிலர் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த சூழலில், நேற்று மற்ற மாணவர்கள் மதிய உணவுக்காக சென்றிருந்த போது, விடுதியின் 7-வது மாடியில் இருந்து தர்ஷன் குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இந்நிலையில், இதுகுறித்த தகவலறிந்த போலீஸார் பாம்பே ஐஐடிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் பலர், தர்ஷனுக்கு எதிராக பேராசிரியர்கள், சில மாணவர்கள் ஜாதி பாகுபாடு காட்டியதே அவர் தற்கொலைக்கு காரணம் எனக் கூறினர். எனினும், தற்கொலை குறிப்பு எதையும் தர்ஷன் எழுதி வைக்காததால் போலீஸாரால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. மேலும், படிப்பு சுமையால் தர்ஷன் தற்கொலை செய்திருப்பாரா என்ற ரீதியில் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+