மும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்!
வளர்ப்பு தந்தையை கொன்ற மகள், காதலன் கைது செய்யப்பட்டார்
மும்பை: சூட்கேஸில் இருந்து கால் ஒன்று வெளியே நீட்டி கொண்டிருந்தவாறு மும்பை பீச்சில் மிதந்து வந்ததை கண்டதும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. சூட்கேஸை திறந்தால் கண்ணில் பட்டது ஆணுறுப்புதான் என்பது அடுத்த அதிர்ச்சி!
மும்பை மாகிம் பீச்சில் போன 4-ம் தேதி, வழக்கம்போல் சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரில் சூட்கேஸ் ஒன்று மிதந்து வந்தது... அதில் ரத்தம் வழிய கால்கள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.

விரைந்து வந்த போலீசார், சூட்கேஸை கைப்பற்றி அதை திறந்து பார்த்தனர். அப்போது அதில் கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், ஆணின் மர்ம உறுப்புகள் கிடந்தன. ஆண் சடலத்தை இப்படி துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொன்று ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, அதனை சூட்கேஸில் வைத்துள்ளனர்.
இந்த உடல் பாகங்களுக்கு மேல் துணிகளும் இருந்தன. அதில் ஒன்றுதான் அந்த ஸ்வெட்டர்.. மற்ற துணிகளை விட்டுவிட்டு போலீசார் ஸ்வெட்டரை மட்டும் வெளியே எடுத்து பார்த்தனர்.. அதில் ஆல்மோஸ் மென்ஸ் வியர் என்ற டெய்லர் கடையின் பெயர் இருந்தது. இது ஒன்று போதுமே நம் போலீசாருக்கு.. இதை வைத்தே அந்த கடையை விசாரிக்க ஆரம்பித்தனர்.. அதன்படி, அந்த கடையும் கண்டுபிடித்தனர்.. ஸ்வெட்டர் பற்றி விசாரித்ததற்கு, கொலை செய்யப்பட்டவரின் பெயரும் அட்ரசும் கிடைத்துவிட்டது.
இப்போது இதை வைத்து, சோஷியல் மீடியாவில் தேட ஆரம்பித்தனர்.. குறிப்பாக ஃபேஸ்புக்கில் தேடியபோது, இறந்தவரின் போட்டோ கிடைத்தது.. அந்த போட்டோவிலும் இதே ஸ்வெட்டர்தான் போட்டுக்கொண்டு இருந்தார்... அவர் பெயர் பெனட் என்பதும் வயது 59 என்பதும் தெரியவந்தது.
இப்போது, பெனட் வீட்டுக்கு போலீசார் விரைந்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்தது.. அக்கம் பக்கம் விசாரித்ததற்கு, பெனட்டுக்கு 19 வயதில் ஒரு வளர்ப்பு மகள் இருக்கிறார், பெயர் ஆரத்யா என்றும் சொன்னார்கள்.
வளர்ப்பு தந்தை இறந்த நிலையில் ஆரத்யா ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்தது.. இதையடுத்து ஆரத்யாவை போலீசார் தேட ஆரம்பித்தனர்.. இறுதியில், ஆரத்யாவை கைது செய்தனர். அவருடன் 16 வயது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த 16 வயது சிறுவன் இதே பகுதியை சேர்ந்தவன்.. ஆரத்யா அவரை காதலித்துள்ளார்.. இந்த விஷயம் வளர்ப்பு தந்தைக்கு தெரியவும் கண்டித்துள்ளார்... மேலும் மகளுக்கு பெனட் பாலியல் தொல்லையும் தந்துள்ளார்.. இதனால்தான் அப்பாவை கொலை செய்ய முடிவு செய்தார் ஆரத்யா.. போன 26-ம் தேதி, 16வயது காதலனுடன் சேர்ந்து, பெனட்டை கம்பால் தாக்கியும்.. கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்.
உயிரிழந்த சடலத்துடன் 3 நாட்கள் இருந்துள்ளார் ஆரத்யா.. இதன்பிறகு 3 நாள் கழித்து சடலத்தை துண்டு துண்டாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு... 3 சூட்கேஸ்களில் அடைத்து, மாகிம் பீச்சில் வீசியிருக்கிறார். இதையடுத்து ஆரத்யாவும், 16 வயது காதலனும் போலீசாரின் பிடியில் இப்போது உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications