மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாவூத் இப்ராகிம் உங்களோடு பேச விரும்புகிறார்.. முதல்வருக்கு வந்த அழைப்பு.. மும்பையில் ஷாக்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் தாவூத் இப்ராகிம் கும்பல் என்று கூறி பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பங்களா மாடோஷ்ரியில் இருக்கிறது. இன்று இரவு அவரது வீட்டுக்கு நிழல் உலக தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

Dawood Ibrahim wanted to talk CM Uddhav Thackeray , Matoshree received a phone call

அழைத்தவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பேச வேண்டும் என்று கோரினார். அவர் எந்த அச்சுறுத்தல்களையும் வெளியிடவில்லை என்று அம்மாநில அமைச்சர் அனில் பராப் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், சனிக்கிழமை இரவு யாரோ ஒருவர் 'மாடோஷ்ரீ' (முதல்வர் இல்லம்) இல்லத்திற்கு தொலைபேசி எண்ணை இரண்டு முறை அழைத்துள்ளார். தாவூத் இப்ராஹிம் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பேச விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், தொலைபேசி ஆபரேட்டர் அந்த அழைப்பை முதல்வருக்கு மாற்றவில்லை., இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.

நான் நிறைய கற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றி ராமநாதபுரம்.. வருண்குமார் ஐபிஎஸ் போட்ட பரபர ட்விட்நான் நிறைய கற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றி ராமநாதபுரம்.. வருண்குமார் ஐபிஎஸ் போட்ட பரபர ட்விட்

இந்த சம்பவம் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மும்பையின் பாந்த்ராவில் உள்ள முதல்வரின் இல்லததிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரவை முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு வந்த அச்சுறுத்தலைக் கண்டித்துள்ளதுடன், கவலை தெரிவித்தது. இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்ளுமாறு அம்மாநில அமைச்சரவை மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது.

English summary
Maharashtra CM Uddhav Thackeray's bungalow Matoshree received a phone call from an unidentified man claiming to be from underworld don Dawood Ibrahim's gang on Saturday, state cabinet minister Anil Parab said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X