பாஜகவுக்கு ஷாக் கொடுக்கும் மகாராஷ்டிரா! காங்கிரஸுக்கும் நல்ல செய்தி இல்லை! சி வோட்டர்ஸ் எக்ஸிட் போல்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு ஆளும் கட்சி கூட்டணியில் பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி இருக்கிறது. மறுபுறம் எதிர்க்கட்சி தரப்பில் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி இருக்கிறது. இதற்கிடையே மகாராஷ்டிர தேர்தல் தொடர்பாக எக்ஸிட் போல் சர்வே வெளியாகி வருகிறது. இந்த முறை அங்கு கடும் போட்டி நிலவும் என்றே சி வோட்டர்ஸ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு ஒரே கட்டமாக நேற்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்துள்ள நிலையில், எக்ஸிட் போல் சர்வே இப்போது வெளியாகி வருகிறது.

இதில் பெரும்பாலான சர்வேக்களில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றே கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சி வோட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர தேர்தல்: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில், 145 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். இதற்கிடையே இந்த முறை அங்கு எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தொங்கு சட்டசபையே அமையும் என்றும் சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடும் போட்டி: அங்கு மொத்தம் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 112 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் என்று சிவோட்டர்ஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணி 104 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 இடங்களில் யார் வெல்வார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு கடும் போட்டி நிலவும் என்று சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிராந்தியம் வாரியாக: மும்பை பிராந்தியத்தைப் பொறுத்தவரை அங்கு பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணியே வெல்ல வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 36 இடங்கள் உள்ள நிலையில், அதில் 17 பாஜக வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி அங்கு 10 இடங்களில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
கொங்கன் பிராந்தியத்தில் தான் பாஜகவுக்கு நல்ல முன்னிலை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு பாஜக கூட்டணி 20 இடங்களைப் பெறலாம் என்றும் காங்கிரஸ் கூட்டணி எட்டு இடங்களைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. 9 இடங்களில் கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது. மராத்வாடாவில் 47 இடங்கள் உள்ள நிலையில், அங்கு பாஜக கூட்டணி 20 இடங்களில் முன்னிலை பெறலாம் என்றும் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 13 இடங்களில் கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது.
வடக்கு மகாராஷ்டிரா: இருப்பினும், வடக்கு மகாராஷ்டிராவில் 9 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் 18 இடங்களில் பாஜக கூட்டணியும் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. 8 இடங்களில் கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. விதர்பா மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டோமணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி விதர்பா பிராந்தியத்தில் 23 தொகுதிகளிலும் மேற்கு மகாராஷ்டிராவில் 34 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி இங்கு முறையே 18 மற்றும் 25 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications