ஐடி ஊழியர்களை விட அதிகம்! முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்கள் சம்பளத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க
மும்பை: ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டில் 600 முதல் 700க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஐடி நிறுவனத்தில் வழங்கப்படும் சம்பளம் போல் சேலரி வழங்கப்படுகிறது. குறிப்பாக டிரைவருக்கு மட்டுமே மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரும் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 10.25 லட்சம் கோடியாகும். முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக மும்பையில் பிரமாண்ட சொகுசு பங்களா உள்ளது.

கார் டிரைவருக்கு மாதம் 2 லட்சம் சம்பளம்
அண்டலியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடியாகும். உலகின் மதிப்பு மிக்க வீடுகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த வீட்டில் பல வசதிகள் உள்ளன. ஹெலிபேடு, தனியாக மருத்துவமனை என வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. இவரது வீட்டில் வேலையாட்கள் மட்டும் 600 முதல் 700 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு சம்பளமும் பெருமளவில் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக முகேஷ் அம்பானியின் டிரைவருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். ஐடி ஊழியர்கள் பெறும் தொகையை விட இது அதிகம் அகும். ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.24 லட்சம் சம்பளம் முகேஷ் அம்பானியின் டிரைவர் பெறுகிறார். முகேஷ் அம்பானியின் வீட்டில் பாதுகாவலர்களுக்கு மாதம் ரூ.14,536 முதல் 55,869 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஆட்சேர்ப்பு பணி எப்படி நடக்கிறது?
அரசு ஊழியர்களை விட இந்த சம்பளத் தொகை அதிகம் ஆகும். ஆனால் அம்பானி வீட்டில் பணிக்கு ஆட்சேர்ப்பு எப்படி நடக்கிறது என்று தெரியுமா? அது பற்றிய சுவாரசிய தகவலும் வெளியாகியுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படுமாம். அது போக டிகிரி அல்லது அதற்கு நிகரான படிப்பு அவசியம்.
உதாரணத்திற்கு நீங்கள் செப் வேலைக்கு விண்ணபிக்கிறீர்கள் என்றால் சமையல் கலையில் நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டும். டிஷ்வாஷ் போன்ற பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கூட கடுமையான டெஸ்ட், சரிபார்ப்பு நடவடிக்கைக்கு பிறகே தேர்வு செய்யப்படுவார்களாம்.
அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளம் மட்டும் இன்றி பல சலுகைகளும் அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு மேலான சலுகைகள் அளிக்கப்படுகிறது. மெடிக்கல் இன்சூரன்ஸ் உள்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் பணிக்கு தகுந்தபடி இது மாறுபடுமாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications