அட இதைக் கூட விடலையாப்பா நீங்க.. பாஜக கட்சிக்காரர்களிடம் சிக்கி கைதான பரிதாப நாய்!
பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த நாயை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மும்பை: பிரச்சாரம் செய்வதற்கு நன்றியுள்ள நாயைகூட விடவில்லை! ஒரு நாயின் கழுத்தில் கட்சி கொடியை பொருத்தி தெருத் தெருவாக அலையவிட்டு பிரச்சாரம் செய்துள்ளார் அந்த நாயின் உரிமையாளர்!
நேற்று மகாராஷ்டிராவில் நந்தூர்பர் உட்பட 17 மக்களவை தொகுதிகளுக்கு 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

நவ்ரத்நகர் பகுதியில் நாய் ஒன்று பாஜகக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது. அதாவது, "பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் நாயின் மீது ஒட்டப்பட்டிருந்தது. காலை முதல் சாயங்காலம் வரை அந்த நாய் ஒரு தெரு விடாமல் ஓடி கொண்டிருந்தது.
இப்படி நாய் ஒன்று பாஜகவுக்கு ஆதரவாக தெரு தெருவாக அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்கிறது என்ற விவரம் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனடியாக விரட்டி பிடித்து நாயை கைப்பற்றினர். தேர்தல் பிரச்சாரம் காலக்கெடு முடிந்தும்கூட அந்த நாய் பிரச்சாரம் செய்ததாகவும், இதனால்தான் அந்த நாயை பிடித்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர், அந்த நாயின் ஓனர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்த கூடாது என்பது விதி. ஆனால் அதை மீறி நாயின் உரிமையாளர் நடந்து கொண்டுள்ளதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications