இப்படியும் ஒரு அப்பா.. ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ.. மும்பையில் ஷாக் சம்பவம்!
மும்பை : மும்பையின் புறநகர் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்ற மகளின் திருமண செலவிற்காக, இரட்டை குழந்தைகளை கடத்தி, கடத்தல் நாடகமாடிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் சமீபத்தில் வீட்டின் வெளியே விளையடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திய 2 பேர், பெற்றோரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். மொபைல் போன் சிக்னலால் போலீசாரிடம் மாட்டிக் கொண்ட அவர்களிடம் விசாரித்த போது, பிரபல டிவி க்ரைம் ஷோவை பார்த்த தான் தங்களுக்கு இந்த ஐடியா வந்தது என கூறி உள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் மற்றொரு புறநகர் பகுதியான அந்தேரியில் மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் இரட்டை குழந்தைகளை கடத்தி, ரூ.1 கோடி கேட்டு பெற்றோரை மிரட்டி உள்ளனர்.
குழந்தைகளின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரில், பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த தனது இரு குழந்தைகள் மற்றும் டிரைவரை மர்ம நபர்கள் அடித்து, பலவந்தமாக கடத்தி சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பைக்கில் வந்த 6 நபர்கள், மயக்க மருந்து கொடுத்து தன்னையும், 2 குழந்தைகளையும் கடத்தியதாகவும், தகவல் அறிந்த போலீசார், பொது மக்கள் உதவியுடன் தங்களை மீட்டதாகவும் டிரைவர் தங்களிடம் கூறியதாக குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் டிரைவரிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். போலீசாரின் சிறப்பான விசாரணைக்கு பிறகு, தானும் தனது உறவினர் ஒருவரும் சேர்ந்து இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியதாகவும், அவருக்கு பாதி பணம் தருவதாக தான் வாக்குறுதி அளித்திருந்தாகவும் உண்மையை ஒப்புக் கொண்டார்.
மேலும் தனது மகளின் திருமண செலவிற்காக ரூ.1 கோடி பெறுவதற்காக குழுந்தைகளை கடத்தி பணம் கேட்டதாகவும் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து டிரைவர் மற்றும் அவரது உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications