பால்தாக்ரே மட்டும் இருந்திருந்தால்.. வாயை உடைத்திருப்பார்! சிவசேனா தலைவர் மீது ஷிண்டே தாக்கு
மும்பை: மும்பையில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவின் பெண் தலைவர்களில் ஒருவரான, சாய்னா குறித்து, உத்தவ் தரப்பு தரக்குறைவாக விமர்சித்துள்ளது. இதனை கண்டித்த ஷிண்டே.. சிவசேனாவை உருவாக்கிய பால்தாக்ரே மட்டும் உயிருடன் இருந்திருந்தால், பெண் தலைவரை அவதூறாக பேசிய வாயை உடைத்திருப்பார் என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியலில் மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இம்மாநிலத்தில் நடக்கும் அரசியல் பிரச்னைகள் ஒட்டுமொத்த நாட்டின் அரசியலை கூட புரட்டிபோட்டுவிடும். இந்த அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மகாயுதி vs மகா விகாடி கூட்டணிகள் எதிர் எதிர் திசையில் நின்றிருக்கின்றன. மகாயுதியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இருக்கின்றன. மறுமுனையில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இருக்கிறது.

இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று இரண்டு கட்சிகளும் கடுமையாக போராடி வருகின்றன. குறிப்பாக, மகாயுதி கூட்டணிக்கு இந்த தேர்தல், தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது. ஏனெனில் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மாகராஷ்டிராவில் பெரும்பாலான இடங்களில் மகாவிகாஸ் கூட்டணியே வெற்றிவாகை சூடியது. ஆளும் கட்சியாக உள்ள மகாயுதி கூட்டணிக்கு இந்த முடிவுகள் பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.
இப்படி இருக்கையில், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் சவாந்த், ஷிண்டே தரப்பு பெண் தலைவரான சாய்னா குறித்து அவதூறாக பேசியிருக்கிறார். இதை வைத்து உத்தவ் சிவசேனா மீது ஷிண்டே தொடர் குற்றச்சாட்டை அடுக்கி வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உத்தவ் சிவசேனா பெண்களை கேவலமாக நடத்துவதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இது உச்சத்தை எட்டியிருக்கிறது. அரவிந்த் இப்படி பேசியிருந்ததை மட்டும் பால்தாக்ரே கேட்டிருந்தால், அவரின் வாயை அடித்து உடைத்திருப்பார். எனவே பால்தாக்ரேவுக்காக தேர்தலில் உத்தவ் சிவசேனாவை நாம் தோற்கபடிப்போம்" என்று கூறியுள்ளார்.
அரவிந்தின் பேச்சு குறித்து, சாய்னா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு விளக்கமளித்த அரவிந்த், "நானும் சாய்னாவும் நீண்ட கால நண்பர்கள். அவரை அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கில் நான் எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. இந்தி மொழியில் நான் பேசிய வார்த்தைக்கு வேறு அர்த்தம் இருக்கிறது" என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விளக்கம் ஷிண்டே தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எனவே இந்த விவகாரம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications