நடுக்காட்டில் பயங்கரம்.. பெண்ணின் சடலத்தை நரிகள் கடித்து சாப்பிட்டதா.. திகிலை தந்த மகாராஷ்டிரா!
தங்கையை கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்
மும்பை: நடுக்காட்டில் 16 வயது சிறுமியின் சடலத்தை நரிகள் சாப்பிட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் நந்தேடு மாவட்டத்தில் தமகான் என்ற கிராமம் உள்ளது.. இங்கு 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.. இந்நிலையில், இவர் கடந்த 20-ம் தேதி காணாமல் போய்விட்டார்.. அதனால் அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்... நாந்தேட் போலீசிலும் புகார் தந்தனர்.

பிறகு 2 நாள் கழித்து, பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலத்தை போலீசார் மீட்டனர்.. அந்த சிறுமி உடம்பெல்லாம் அழுகி கிடந்தது.. நரிகள், நாய்கள் சடலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு போனதாக போலீசார் கூறினர்.
எனினும் சிறுமி ஏன் காட்டுக்கு போனார்? என்பது குறித்து விசாரணை ஆரம்பமானது... அப்போதுதான் சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள இளைஞனை ஒன்றரை வருஷமாக காதலித்து வந்துள்ளது தெரியவந்தது.. அதனால் காதலன்தான் தங்கள் மகளை காட்டுக்குள் அழைத்து சென்று கொன்றிருக்க வேண்டும் என்று குடும்பத்தினர் சொன்னார்கள்.
இதனால் அந்த இளைஞரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. ஆனால், சிறுமி குடும்பத்தினர் இதுவரை ஸ்டேஷனில் புகார் தர முன்வராததால், அந்த குடும்பத்தினர் மீதே போலீசாருக்கு சந்தேக பார்வை திரும்பியது. அப்போதுதான் சிறுமியின் அண்ணன் அனில் சூர்யவன்ஷி மீது சந்தேகம் வலுத்தது.. இவருக்கு 26 வயதாகிறது.
தங்கையை தான் கொன்றதாக திடீரென ஒரு குண்டை தூக்கி போட்டார்.என் தங்கச்சி இன்னொரு இளைஞருடன் பழகுவது பிடிக்கவில்லை.. நானே அவளை கொன்றேன்.. காட்டில் பிணத்தை வீசிவிட்டு வந்தேன் என்றார். நாந்தேட் போலீசார் இதை கவுரவ கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.. சம்பந்தப்பட்டவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காட்டில் விழுந்த சடலத்தை தான் நரிகளும், நாய்களும் கொஞ்சமாக எடுத்து சாப்பிட்டு விட்டு போனதாக கூறப்படுகிறது. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications