"இந்தியாவில் சாதியை அழிக்க வேண்டும்.." திட்டவட்டமாக சொல்லும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சாதிகளை அகற்ற வேண்டும் எனப் பேசியுள்ளார். இந்தியர்கள் தங்கள் மனதிலிருந்து சாதியை நீக்குவதன் மூலம், ஆழமாக வேரூன்றிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உண்மையான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அடுத்த 10-12 ஆண்டுகளில் சாதி முறை முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டை முன்னிட்டு 'ஜன் சகோஷ்டி' மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மகாராஷ்டிராவில் நடைபெற்றது. இந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய சில கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. சாதியின் தோற்றம் தொடர்பாகப் பேசிய அவர், சாதிகள் முதலில் தொழில் அடிப்படையிலான பணிகளாக இருந்தவை என்றும் பின்னர் அவை சமூகப் பிளவுகளாக மாறி, பாகுபாட்டை வளர்த்தன என்றும் தெரிவித்தார்.

சாதியை அழிக்க வேண்டும்
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "இந்தப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர, முதலில் மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும். நேர்மையான, கூட்டு முயற்சி இருந்தால் 10 முதல் 12 ஆண்டுகளில் சாதியை முழுமையாக நீக்க முடியும். வெறும் சடங்குகளை விட, மன ரீதியான சீர்திருத்தம் என்பது கட்டாயம் தேவைப்படுகிறது.
பொதுமக்களின் தனிப்பட்ட குணநலன்களை வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு வலிமையூட்டி, தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம். ஆர்எஸ்எஸ் பெரிய சங்கமாக மாற எப்போதும் விரும்பியதில்லை. சமூகத்தை மேம்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும். எதிர்ப்புகளுக்கு எதிர்வினையாற்றுவதோ, போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதோ ஆர்.எஸ்.எஸ் வேலை இல்லை.. முற்றிலும் தேசத்தை மையமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் செயல்படும்" என்றார்.
மோகன் பகவத்
மேலும், மோகன் பகவத் இந்த நிகழ்வில் ஞானிகளைப் புகழ்ந்து பேசினார். ஞானிகளை எப்போதும் உண்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்று குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே ஞானிகள் எங்குச் சென்றாலும் அவர்களுக்கு மரியாதை கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "ஞானிகளுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஞானிகளின் கோரிக்கைகளைப் பிரதமர் மோடி கூட ஏற்க மறுக்க மாட்டார்" என்றார்.
ஞானிகள்
ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு நிகழ்வில் பேசிய மோகன் பகவத், இந்தியாவின் வழிகாட்டியாகத் தர்மம் இருக்கும் வரை, இந்தியா என்றென்றும் உலகின் விஸ்வகுருவாக இருக்கும் என குறிப்பிட்டார். தர்மம் என்பது தனித்துவமான ஆன்மீக ஞானம் என்பதை அவர் எடுத்துரைத்தார். மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்டு, ஞானிகளால் நிலைநிறுத்தப்பட்ட தர்மமே பிரபஞ்சத்தின் இறுதிப் பிரபவகாரணி என்றும் அவர் விளக்கினார்.
தர்மம் என்பது மதமல்ல
மோகன் பகவத் மேலும் பேசுகையில், "நரேந்திர மோடியாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி, அனைவரையும் இயக்கும் ஒரே சக்தி ஒன்றுதான். அந்தச் சக்தியால் வாகனம் ஓட்டப்பட்டால், ஒருபோதும் விபத்து ஏற்படாது. அதுதான் தர்மம். தர்மம் என்பது வெறும் மதமல்ல. அதுதான் ஒழுக்கம்.. தர்மமே முழுப் பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்தி. எல்லாமே அந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.
தர்மம் என்பது ஒவ்வொரு உயிரினத்திலும் பரவியுள்ளது.. நீர் பாய்வது தர்மம், நெருப்பு எரிவது தர்மம். மதச்சார்பற்ற அரசுகள் இருந்தாலும், எந்த மனிதனும் அல்லது படைப்பும் தர்மத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications