"என் உயிரே போனாலும் சரி..!" வீட்டில் அமலாக்க துறை ரெய்டு.. ஆவேசமான சிவசேனாவின் சஞ்சய் ராவத்!
மும்பை: சிவசேனாவின் சஞ்சய் ராவத் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணிகள் சில காலத்திற்கு மேற்கொள்ளப்பட்டது. அதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.
குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தைத் தனியார்த் துறையினருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

விசாரணை
இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சிவசேனா முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பிக்கு நெருக்கமான தொழிலதிபர் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் சுமார் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன.

அவகாசம்
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராக சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், முதல்முறை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இடையே ஜூலை 1ஆம் தேதி சில மணி நேரம் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் இரு முறை சம்மன் அனுப்பியும் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரில் ஆஜராவதாகவும் அவகாசம் கோரி இருந்தார்.

சோதனை
இதற்கிடையே இன்று காலை அமலாக்கத் துறையினர் சஞ்சய் ராவத் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சஞ்சய் ராவத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பத்ரா சால் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகாததாலேயே இந்த நடவடிக்கை எடுத்ததாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இது அரசியல் பழிவாங்கல் காரணமாகப் போடப்பட்ட வழக்கு என சஞ்சய் ராவத் மறுத்துள்ளார்.

உயிரே போனாலும்
இன்று காலை சஞ்சய் ராவத் தனது ட்விட்டரில், "எந்தவொரு ஊழலுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே மீது ஆணையாக இதை நான் சொல்கிறேன். பாலாசாகேப் எங்களுக்கு போராட கற்றுக் கொடுத்தார். சிவசேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். இது பொய்யான குற்றச்சாட்டு.. போலியான ஆதாரம். நான் சிவசேனாவை விட்டு விலக மாட்டேன். என் உயிரே போனாலும் சரணடைய மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா" என்று பதிவிட்டு உள்ளார்.

பாஜக கேள்வி
சஞ்சய் ராவத் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டு உள்ளதாக தாக்கரே ஆதரவு சிவசேனா தலைவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அதேநேரம் அவர் விசாரணைக்கு ஆஜராகத் தவறியது ஏன் என பாஜகவின் ராம் கதம் கேள்வி எழுப்பினார். "நிரபராதி என்றால் அவர் ஏன் அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்? பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு அவருக்கு நேரம் இருக்கிறது.. ஆனால் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக நேரமில்லையா" என்று சாடி உள்ளார்,
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications