ஆ.. நமீதாவை பாருங்க.. குழந்தையுடன் படக்குனு சபைக்குள்ளயே வந்துட்டாரு.. அப்படியே மலைத்து பார்த்த ஜனம்
பாஜக எம்எல்ஏ நமீதா தன்னுடைய 2 மாத குழந்தையுடன் சட்டசபைக்கு வந்திருந்தார்
மும்பை: பாஜக எம்எல்ஏ நமீதா, தன்னுடைய 2 மாத குழந்தையுடன் சட்டசபைக்கு வந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார்.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் ஷேர் ஆகி வருகின்றன.
இளம் அரசியல்வாதிகள் அதிகரித்து வரும்நிலையில், அதில் இளம்பெண்களின் அரசியல் பங்களிப்பும் அதிகமாகி கொண்டே வருவது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடைபெற்றது.. குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக மாநிலத்தின் 2வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம்.

ஹேப்பி குழந்தை
ஆனால், கடந்த 2 வருடங்களாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால், நாக்பூரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாமலேயே இருந்தது. பின்னர் கடந்த வருட இறுதியில் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடைபெற்றது. அப்போது, சட்டசபை கூட்டத்தொடரில், தியோலாலி தொகுதி பெண் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அகிரே, தன்னுடைய இரண்டரை மாத கைக்குழந்தையுடன் வந்திருந்தார்.. கைக்குழந்தையுடன் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்றதை பலரும் வியந்து பார்த்தனர்.. இதுகுறித்து எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் சொன்ன விளக்கம் தொகுதி மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்று தந்திருந்தது.

தாய்மை
ஆஹிர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் ஒரு தாய்... மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் இரண்டரை வருடங்களாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் எதுவும் நடைபெறவில்லை. நான் இப்போது தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது. அந்த கேள்விகளுக்கு பதில்களையும் பெற வேண்டி உள்ளது.. அதனாலேயே நான் இன்று அவைக்கு வந்துள்ளேன்" என்று கூறி, அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தியிருந்தார்.

வெள்ளை துணி
இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ நமீதா முன்டாடா, தன்னுடைய 2 மாத குழந்தையுடன் சட்டசபைக்கு இன்று வருகை தந்திருந்தார்.. மகாராஷ்டிராவில் பட்ஜெட் கூட்டத் தொடரில் குழந்தையுடன் பாஜக எம்.எல்ஏ பங்கேற்றது பேசுப்பொருளாகியுள்ளது. தன்னுடைய 2 மாத குழந்தை லெக்கியுடன் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் நமீதா இன்று பங்கேற்றார்.. அது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்களை அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்து, மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். குழந்தையை ஒரு வெள்ளை துணியில் போர்த்தி, இரு கைகளாலும் நெஞ்சோடு அணைத்தபடி அவைக்குள் நுழைந்தார் நமீதா..

ஹிர்கானி அறை
மராட்டிய சட்டசபையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக 'ஹிர்கானி அறை' என்ற தனி ரூம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. எனவே, குழந்தைகளை தூக்கி வரும் இளம் தாய்மார்களுக்கு இந்த அறை பேருதவியாகவும் திகழ்ந்து வருவதாக சொல்கிறார்கள்.. நமீதா சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்ததை, அங்கிருந்தவர்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர்.. சில பெண்கள், நமீதாவிடம் நெருங்கி சென்று குழந்தையை கொஞ்சியதுடன், நலம் விசாரித்துவிட்டும் சென்றனர்... இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications