வாட்டியெடுத்த தனிமை.. பொண்ணுக்கு வயசு 45.. மனமுருகிய மாப்பிள்ளை.. அம்மாவை நெகிழ வைத்த மகன்.. ஆஹா..!
தாய்க்கு மறுமணம் செய்து வைத்த இளைஞரை நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி செல்கின்றனர்
மும்பை: தன்னுடைய விதவை தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ள இளைஞரை, அந்த பகுதி மக்களே திரண்டு சென்று வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறார்கள்.. இந்த சம்பவம் இணையத்திலும் பலரது கவனத்தை பெற்று வருகிறது.
இன்றைய சூழலில், தூய்மையான காதல் என்றாலும், அது தோல்வியாகும்பட்சத்தில், இன்னொரு காதல் மலர்வது இயல்பாகிவிட்டது. இந்த நடைமுறை நம் கலாச்சாரத்தில் எப்போதோ புகுந்துவிட்டது என்றாலும், நம் சமூகத்தில் இன்னும் சில கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு தான் வருகின்றன...
எழுதப்படாத விதிமுறைகளும் நிலுவையில் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் திருமணமாகி, கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது..

அக்கறை பிள்ளைகள்
என்னதான் நாகரீகம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் பேசினாலும், கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்களுக்கு, இன்னொரு திருமணத்தை இந்த சமூகம் முழுமையாக அங்கீகரிப்பதில்லை. இதுபோல் லட்சக்கணக்கான இளம்வயது பெண்கள், நாலு சுவர்களுக்குள்ளேயே தங்கள் வாழ்நாளை கழித்து, இறந்து போகும் அவலமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. எனினும் ஆங்காங்கே இந்த நிலைமை மாறி வருகிறது.. அதிலும் இளைய சமுதாயம், புது சிந்தனையுடன் வளர தொடங்கிவிட்டார்கள்.. தாயின் மகன் மற்றும் மகள்களிடையே இந்த மாறுதல்கள் ஏற்பட துவங்கிவிட்டது..

நெகிழ்ச்சி
இப்படித்தான் கேரள மாநிலத்தில், சமீபத்தில் கூட, ஒரு மகள், தன்னுடைய தாய்க்காக வரன் தேடிய நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல, 59 வயது தாய்க்கு, அவரது மகள் இன்னொரு திருமணம் செய்து வைத்த நிகழ்வும் இதே கேரளாவில்தான் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.. 2 மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்திலும், டி கே சௌஹான் என்ற 75 கூயது தொழிலதிபருக்கு திருமணம் செய்து வைத்து அழகுபார்த்துள்ளனர் அவரது பிள்ளைகள்.. இப்போது மீண்டும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது..

கண்டுக்கல
கோலாப்பூரை சேர்ந்தவர் யுவராஜ்.. 23 வயதாகிறது.. இவரது அப்பா கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். ஆனால், தன் தந்தையின் மரணத்துக்கு பிறகு, அம்மா ரத்னா சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதை யுவராஜ் நேரில் கண்டு வேதனைப்பட்டார்.. அதாவது, சுபநிகழ்ச்சிகளுக்கு எங்குமே தன்னுடைய தாயை யாருமே அழைப்பது இல்லையாம்.. மேலும் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதையும் கவனித்த யுவராஜ், தன்னுடைய அம்மாவுக்கு ஒரு வாழ்க்கை துணை தேவை என்பதை உணர்ந்தார்..

புறக்கணிப்பு
இதற்காக திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.. தன் விருப்பத்தை அம்மாவிடம் சொல்லி, தீவிர முயற்சிக்கு அவரை சமாதானம் செய்தார்.. இறுதியில், மாருதி கன்வத் என்பவருக்கு தன் தாயை மறுமணம் செய்து வைத்திருக்கிறார். அம்மாவின் மறுமணம் குறித்து மகன் யுவராஜ் சொல்லும்போது, "18 வயதில் அப்பாவை இழந்தேன்.. அதுவே எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் அவரின் மறைவானது, என்னுடைய அம்மாவுக்கு பேரிழப்பாக இருந்தது. அவர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் தவித்தார்...

தனிமை வேதனை
25 வருடமாக என்னுடைய அப்பாவுடன் திருமண பந்தத்தில் இருந்தவர் என்னுடைய அம்மா.. ஆனால், ஒரு ஆண், மனைவியை இழக்கும்போது, அவர் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்த சமூகம் நினைக்கிறது. ஆனால் அதே ஒரு பெண், கணவரை இழந்தால் மட்டும் சமூகம் ஏன் அவரும் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என உணர மறுக்கிறது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.. அதனால்தான், எனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். கோலாப்பூர் போன்ற பாரம்பரிய மிக்க ஊரில் இப்படிப்பட்ட மறுமணம் என்பது எளிதான காரியமல்ல..

வாழ்த்து குஷி
அங்குள்ள குடும்பத்தினர், உறவினர்களை சம்மதிக்க வைப்பது மிகவும் கடினமான விஷயம்.. நண்பர்கள், உறவினர்களுடன் என் அம்மாவுக்கு பொருத்தமானவரை தேடினேன். அதிர்ஷ்டவசமாக மாருதி கன்வத் குறித்து எங்களுக்கு தெரியவந்தது. அவருடன் பேசினோம். அவர் முழு சம்மதம் தந்த பிறகுதான், திருமணம் முடிவானது" என்று பூரித்து சொல்கிறார்.. அதேபோல, மாப்பிள்ளை மாருதி கன்வத் சொல்லும்போது, "நான் கடந்த சில வருடங்களாகவே தனியாக தான் வாழ்ந்து வந்தேன்... ரத்னாவை சந்தித்து அவருடன் பேசிய பிறகு தான் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்கள் உண்மையானவர்கள்'' என்றார்.

தனியே தன்னந்தனியே
இந்த மறுமணம் செய்த இளைஞரின் அம்மா ரத்னா சொல்லும்போது, ''ஆரம்பத்தில் எனக்கு மறுமணத்தில் விருப்பம் இல்லை... எனது கணவரை மறக்க நான் தயாராக இல்லை. ஆனால் பல விஷயங்கள் குறித்து என் மகன் பேசிய பிறகுதான் சமாதானம் அடைந்தேன். வாழ்நாள் முழுவதும் இனிமேல் தனியாகவே வாழப்போகிறாயா? என்று எனக்குள் நானே கேட்டு கொண்டேன்.. இறுதியில் மறுமணத்திற்கு சம்மதித்தேன்'' என்றார். விதவை தாய்க்கு மகனே நடத்தி வைத்த திருமணத்துக்கு வந்தவர்கள் சீர்திருத்த கல்யாண தம்பதியை பலரும் திரண்டு வந்து மனதார வாழ்த்தி சென்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications