மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்”

Google Oneindia Tamil News

மும்பை: அசாம் தலைநகர் கவுஹாத்தியில் முகாமிட்டிருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் முன் இருக்கும் 5 வாய்ப்புகள் என்னவென்று பார்ப்போம்.

Recommended Video

    Shiv Sena முக்கிய நடவடிக்கை எடுக்கும்: Uddhav Thackeray அதிரடி | *Politics

    மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

    3 பேரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி! டிடிவி + ஓபிஎஸ் + சசிகலா.. சட்டுனு மாறும் ரூட்.. அதிமுக அப்செட்? 3 பேரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி! டிடிவி + ஓபிஎஸ் + சசிகலா.. சட்டுனு மாறும் ரூட்.. அதிமுக அப்செட்?

    இந்த நிலையில் கடந்த 21ம் தேதி சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் முகாமிட்டனர். அதன் பின்னர் அவர்கள் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 2 நாட்களில் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர்களின் பலம் 39 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் முன் இருக்கும் 5 வாய்ப்புகளை பார்ப்போம்.

    வாய்ப்பு 1

    வாய்ப்பு 1

    சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத காரணத்தால் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே கோரி இருக்கிறார். அதன் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டால், அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிடும். எனவே தற்காலிக நடவடிக்கையாக தகுதிநீக்க நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே வழக்கு தொடரலாம்.

    வாய்ப்பு 2

    வாய்ப்பு 2

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதலாம் என மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் முன்னாள் முதன்மை செயலாளர் அனந்த் கால்சே கூறி இருக்கிறார். "இதில் ஒரு சிக்கல் உள்ளது. இதற்காக தனக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களுடன் மற்ற கட்சியின் ஆதரவை திரட்ட வேண்டும்." என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

    வாய்ப்பு 3

    வாய்ப்பு 3

    ஒருவேளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் இணைந்தால், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளை மீறிவிட்டதாக தொண்டர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும். இது அவர்களின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம். எனவே எம்.எல்.ஏ. பச்சு குடுவின் பிரஹார் ஜனசக்தி கட்சியுடன் அவர்கள் இணையலாம்.

    வாய்ப்பு 4

    வாய்ப்பு 4

    அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவிடம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால், தேர்தல் ஆணையத்தை அணுகி கட்சியின் சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அதே நேரம் சிவசேனா கட்சியின் அரசியலமைப்பு சட்டம் இதற்கு வழிவகை செய்யாது என்றும், கட்சியின் அடிமட்டத் தலைவர்களின் ஆதரவு தங்களுக்கே உள்ளதாகவும் உத்தவ் தாக்கரே அணி கூறுகிறது.

    வாய்ப்பு 5

    வாய்ப்பு 5

    இதில் எதுவும் முடியாவிட்டால், ராஜஸ்தானைபோல், தர்மயுத்தத்துக்கு பின் எடப்பாடி - ஓபிஎஸ் சேர்ந்ததைபோல் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மனக்கசப்புகளை களைந்து புரிதலை ஏற்படுத்தியபின் பழைய பொறுப்புகளில் தொடரலாம். ஆனால், இரு தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து இருப்பதால் மோதலும், மனக்கசப்பும் பெருகியுள்ளது. எனவே இதற்கான வாய்ப்பும் குறைவுதான்.

    English summary
    Expected 5 moves of Eknath shinde on Maharashtra political crisis: அசாம் தலைநகர் கவுஹாத்தியில் முகாமிட்டிருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் முன் இருக்கும் 5 வாய்ப்புகள் என்னவென்று பார்ப்போம்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X