Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 பிரபல தமிழ் நடிகைகள்".. பங்களாவில் விபச்சாரம்.. கஸ்டமர் போல நுழைந்த போலீஸ்.. கடைசியில் பார்த்தால்?

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 26 பெண்களை மும்பை போலீசார் மீட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பங்களா வீட்டுக்குள் விபச்சாரம் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து, விசாரணையில் இறங்கினர் போலீசார்.. இதற்காக ஒரு நபரை கஸ்டமர் போல தயார் செய்து, அந்த பங்களா வீட்டுக்குள்ளும் அனுப்பினர்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
இந்தியா முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர்... குறிப்பாக மும்பையில் பெருமளவு இவர்கள் விபச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும், இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் பல காலமாகவே முன்வைத்து வருகின்றனர்.

 ஆசை ஆசையாய்

ஆசை ஆசையாய்

அதேசமயம், விபச்சார தொழிலையும் கைவிடாமல் காசு பார்த்து வருகின்றனர்.. சட்டவிரோதமாக இதுபோன்ற செயல்படுவோரை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் போலீசார் இறங்கி வருகிறார்கள்.. ஆடம்பர வாழ்க்கை, கையில் நிறைய காசு, போன்றவைகளுக்கு ஆசைப்பட்டு இளம்வயதிலேயே வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்களும் ஏராளம்.. சிலர், இதெல்லாம் தெரிந்தும்கூட, இந்த தொழிலை செய்ய முன்வருகின்றனர்... அப்படித்தான் மும்பையில் ஒரு பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது..

 2 தமிழ் நடிகைகள்

2 தமிழ் நடிகைகள்

உடனே போலீசாரும் மறைந்திருந்து சம்பந்தப்பட்ட பங்களாவை கண்காணித்தனர்.. அந்த பங்களாவுக்குள் சிலர், பதுங்கி பதுங்கி செல்வதையும் பார்த்தனர்.. அங்கு விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்ததுடன், திடீரென அந்த பங்களாவுக்குள் உள்ளே நுழைந்து ரெய்டு நடத்தினர்.. அதில், 2 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் சிக்கினர்.. இந்த 5 பேரில் ஒருவர்தான் அந்த பங்களா ஓனர்.. 2 பேர் புரோக்கர்கள்.. மற்ற 2 பெண்களும் நடிகைகளாம்.. அதுவும் தமிழ் நடிகைகள்.. அதுவும் ஹீரோயின்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.. தமிழ்தவிர, சில இந்திப்படங்களிலும் 2 பேரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்களாம்..

 பிரபல நடிகைகள்

பிரபல நடிகைகள்

இவர்களுக்கு தற்சமயம் மார்க்கெட் இல்லை என்பதாலும், கைவசம் படம் இல்லை என்பதாலும், காசு இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் விபச்சாரத்திற்கு வந்துவிட்டதாக 2 பேரும் போலீசில் அழுது புலம்பி உள்ளனர்.. எனினும், அந்த நடிகைகள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களது பெயரை போலீசார் வெளியிட மறுத்திருந்தனர்.. ஆனால், இந்த செய்தி அப்போது பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டது.. இப்போது, மீண்டும் ஒரு விபச்சார கும்பல் இதே மும்பையில் சிக்கி பரபரப்பை கிளப்பி வருகிறது.

 மாறும் கோலம்

மாறும் கோலம்

மும்பையில் விபச்சாரங்கள் பரவலாக நடக்கும் விஷயம் என்றாலும், இந்த சம்பவம் அதிர வைக்கிறது.. லேமிங்டன் சாலையில் உள்ளது அந்த பங்களா வீடு.. அந்த வீட்டில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்.. பல்வேறு மாநிலங்களில் இருந்து அவர்கள் அழைத்து வரப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக, சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலின் பேரில் போலீசார், உண்மை என்ன என்பதை கண்டறிய முற்பட்டனர்..

 கஸ்டமர்ஸ்

கஸ்டமர்ஸ்

உறுதியாக தெரிந்தால் மட்டுமே அவர்களை கைது செய்ய முடியும் என்பதால், கஸ்டமர்களை போல், ஒருவரை அனுப்பி சோதனை நடத்தி உள்ளனர்.. அந்த நபர் உள்ளே சென்று, அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்துள்ளார்.. ஆனால் அங்கு 4 பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள்... 20-க்கும் மேற்பட்ட பெண்கள் என்று புகார்கள் வந்தநிலையில், வெறும் 4 பேர் மட்டும் எப்படி இருப்பார்கள்? என்று அந்த நபருக்கு சந்தேகம் வந்தது.. பிறகு, அந்த பங்களாவில் இருந்தோரிடம் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் வெளியே வந்துவிட்டார்.. போலீசாரிடமும் விஷயத்தை சொன்னார்..

 ரகசியம் ரகசியம்

ரகசியம் ரகசியம்

இதனால் போலீசார், அதிரடியாக அந்த வீட்டை சுற்றி வளைத்துவிட்டனர்.. உள்ளே புகுந்து ரெய்டில் இறங்கினார்.. எந்த பக்கம் திரும்பினாலும் 4 பெண்கள் மட்டுமே இருப்பது தெரியவந்ததால், மொத்த போலீஸாரும், குழம்பி விட்டனர்.. அதனால், அங்கிருக்கும் ரூம்களை தவிர, சுவர்களை ஆராய தொடங்கினர்.. அப்படி நோட்டமிடும்போதுதான், ஒரு ரகசிய அறை அங்கே இருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த ரகசிய அறையை திறந்து பார்த்தால், போலீசாருக்கு ஒரே அதிர்ச்சி...

 பாதாள ரூம்

பாதாள ரூம்

காரணம் அந்த ரூமுக்குள் மொத்தம் 26 பெண்கள் இருந்திருக்கிறார்கள்.. எல்லாருமே வேறு வேறு மாநிலத்தை சேர்ந்த்வர்கள்.. வேலை தேடி, வாய்ப்பு தேடி சொந்த கிராமங்களில் இருந்து கிளம்பி வந்தவர்கள்.. அவர்களுக்கு வேலை தருவதாக சொல்லி ஏமாற்றி, கட்டாயப்படுத்தி இப்படி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமான 4 பேரை போலீசார் கைது செய்து, ரகசிய அறையில் இருந்த 26 பெண்களையும் மீட்டுள்ளனர் போலீசார்.. இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாதாள குழி

பாதாள குழி

மும்பை லேமிங்டன் ரோடு, தெற்கு மும்பையில் உள்ளது.. இதற்காக, அந்த கட்டிடத்தில் குழி வெட்டப்பட்டு ரகசிய அறை உருவாக்கப்பட்டுள்ளதாம்.. ஆனால், வெளியில் இருந்து பார்ப்பதற்கு சாதாரண பங்களா போலவே தோற்றம் தந்துள்ளது.. இந்த விவகாரத்தில் கைதாகி இருப்பது 4 பேர் என்றாலும், அதில் 3 பேர் பெண்கள் என்பதுதான் பெருத்த அதிர்ச்சியாக உள்ளது.. 4 பேருமே தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர்.. இவர்களை தவிர, மேலும் சிலர் இந்த விபச்சார தொழிலில் லாபம் பார்த்து வந்துள்ளனர்.. ஆனால், அவர்களில் 10 பேர் போலீஸ் ரெய்டு தெரிந்ததும் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

குழிக்குள் குழி

குழிக்குள் குழி

வீட்டின் ரகசிய அறையில் இருந்து மீட்கப்பட்டவர்கள், வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், தங்களை துன்புறத்தியே விபச்சாரத்தில் தள்ளியதாகவும் போலீசாரிடம் சொல்லி உள்ளார்.. இதையடுத்து, மீட்கப்பட்ட பெண்கள் அனைவரையும், மேலதிக விசாரணைக்காக டிபி மார்க் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.. இந்த கைது நடவடிக்கை குறித்து போலீஸார் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), 308, மற்றும் ஆபாசமான குற்றங்கள் உட்பட தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை பாதாள அறைக்குள் மறைத்து வைத்திருந்ததால் பிரிவு 308-ன் கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.. இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, மும்பை சிட்டி பாரில், பாதாள குழி தோண்டி பாதாள அறை அமைத்து, 17 பெண்களை மறைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களையும் மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+