"பிரபல நடிகை" விபச்சாரம்.. கஸ்டமர் போல நுழைந்த போலீஸ்.. யாருனு பார்த்தால்? அசிங்கப்பட்ட 24 வயது நடிகை
மும்பை: நடிகை ஒருவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு கைதாகி உள்ளார்.. அவரிடம் சிக்கியிருந்த அப்பாவி பெண்களை மீட்ட போலீசார், நடிகையிடம் விசாரணையை துவங்கி உள்ளனர்.
பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும், இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் பல காலமாகவே முன்வைத்து வருகின்றனர்.

அதேசமயம், விபச்சார தொழிலையும் கைவிடாமல் காசு பார்த்து வருகின்றனர்.. சட்டவிரோதமாக இதுபோன்று செயல்படுவோரை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் போலீசார் இறங்கி வருகிறார்கள்.. ஆடம்பர வாழ்க்கை, கையில் நிறைய காசு, போன்றவைகளுக்கு ஆசைப்பட்டு இளம்வயதிலேயே வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்களும் ஏராளம்..
தமிழ் நடிகைகள்: சிலர், இதெல்லாம் தெரிந்தும்கூட, இந்த தொழிலை செய்ய முன்வருகின்றனர்... அப்படித்தான் மும்பையில் ஒரு பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது..
உடனே போலீசாரும் மறைந்திருந்து சம்பந்தப்பட்ட பங்களாவை கண்காணித்தனர்.. அந்த பங்களாவுக்குள் சிலர், பதுங்கி பதுங்கி செல்வதையும் பார்த்தனர்.. அங்கு விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்ததுடன், திடீரென அந்த பங்களாவுக்குள் உள்ளே நுழைந்து ரெய்டு நடத்தினர்..

அதில், 2 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் சிக்கினர்.. இந்த 5 பேரில் ஒருவர்தான் அந்த பங்களா ஓனர்.. 2 பேர் புரோக்கர்கள்.. மற்ற 2 பெண்களும் நடிகைகளாம்.. அதுவும் தமிழ் நடிகைகள்.. அதுவும் ஒருகாலத்தில் புகழ்பெற்ற ஹீரோயின்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.. தமிழ்தவிர, சில இந்திப்படங்களிலும் 2 பேரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்களாம்.. இவர்களுக்கு தற்சமயம் மார்க்கெட் இல்லை என்பதாலும், கைவசம் படம் இல்லை என்பதாலும், காசு இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் விபச்சாரத்திற்கு வந்துவிட்டதாக 2 பேரும் போலீசில் அழுது புலம்பி உள்ளனர்..
யார் அந்த நடிகை: எனினும், அந்த நடிகைகள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களது பெயரை வெளியிட போலீசார் அப்போது மறுத்துவிட்டனர்.. ஆனாலும், இந்த செய்தி அப்போது பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டது.. இப்போது, மீண்டும் ஒரு விபச்சார கும்பல் இதே மும்பையில் சிக்கி பரபரப்பை கிளப்பி வருகிறது. மும்பையின் ஆரே காலனி பகுதியில் உள்ளது ராயல் பாம் என்ற ஹோட்டல்.. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதுவும், நடிகை சுமன் குமாரி என்பவர், இந்த பாலியல் தொழிலை ஓட்டலில் நடத்தி கொண்டிருப்பதாக தகவல் வந்தது..
இவர் புகழ்பெற்ற போஸ்புரி நடிகை ஆவார்.. புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளதுடன், சில மாடல் அழகிகளை வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியும் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.. அந் நேரம்பார்த்து, பாலியல் கஸ்டமர்களிடம், பணம் வசூல் செய்து கொண்டிருந்தார் போஜ்புரி நடிகை சுமன் குமாரி.. அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்... மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 3 மாடல் அழகிகளை ஹோட்டலில் இருந்து போலீசார் மீட்டனர்.
மாடல் அழகிகள்: இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "கைது செய்யப்பட்ட போஜ்புரி நடிகை சுமன் குமாரி, பாலியல் வாடிக்கையாளர்களுக்கு மாடல் அழகிகளை சப்ளை செய்து வருவதாகவும், அதற்காக பல பெண்களை பயன்படுத்தி வந்ததும் தொியவந்தது... அதனால், ஹோட்டலில் இருந்த பாலியல் தொழில் கும்பலை கையும் களவுமாக பிடித்தோம். பெண்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் நடிகை சுமன் குமாரியை கைது செய்துள்ளோம். கடந்த 6 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வந்த சுமன் குமாரி, பாலியல் தொழில் புரோக்கராக எவ்வளவு காலம் செயல்பட்டு வந்துள்ளார். அதனால் அதுகுறித்த விசாரணையையும் கையில் எடுத்துள்ளோம்" என்றனர்.
அதாவது, மும்பை, ஆரே காலனி பகுதியில் உள்ள ராயல் பாம் ஹோட்டலில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. கடந்த 6 வருடமாகவே நடிகை சிக்காமல் தப்பியபடியே வந்துள்ளார். அதனால், குற்றவாளிகளை சிக்க வைக்க போலீசாரே பிளான் செய்திருக்கிறார்கள்.. இதற்காக, நடிகை சுமன் குமாரியிடம் பேசுவதற்காக போலி கஸ்டமர்களை போலீசாரே அந்த ஓட்டலுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

பணம் வசூல்: ஒவ்வொரு மாடலுக்கும் 50,000 முதல் 80,000 ரூபாய் வரை ரேட் பேசியிருக்கிறார்கள்.. அதற்கான பணத்தையும் நடிகை பெற்றுக்கொள்ளும்போதுதான், நடிகை கையும், களவுமாக பிடிபட்டிருக்கிறார்.. இப்போது, நடிகை போலீஸ் காவலில் உள்ளார்.. மேலும் பாலியல் மோசடியில் ஈடுபட்ட மற்ற நபர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதுபோன்ற உயர்மட்ட பாலியல் மோசடிகள், சமீபகாலமாக அதிகரித்தபடியே வருவதால்,போலீசார் இந்த அதிரடியை நடத்தியிருக்கிறார்கள்.. வாடிக்கையாளர்களுக்கு மாடல்களை சப்ளை செய்யும் நடிகை சுமன் குமாரிக்கு 24 வயதுதான் ஆகிறது... 6 வருடங்களாகவே இந்த தொழிலை செய்து, ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்துள்ளார்.. மாடல் அழகிகளில் வறுமையில் உள்ளவர்கள், திடீர் பண பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு குறி வைப்பாராம் நடிகை.. அதற்கு பிறகு, இந்த தவறான தொழிலில் ஈடுபடுத்தி விடுவாராம்.
அசிங்கம் : பிரபல நடிகையாக இருந்தே நிறைய சம்பாதித்திருக்கிறார் சுமன் குமாரி.. இதைதவிர, பாப் நம்பி பீட்டா தஸ் நம்பி போன்ற போஜ்புரி கமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.. இது தவிர, பூம் OTT சேனலிலும் பணியாற்றியுள்ளார்.. பணம் சம்பாதிக்க இத்தனை வழிகளும், வாய்ப்புகளும் இருந்தும்கூட, பாலியல் தொழிலில் கையும் களவுமாக சிக்கி, இப்போது மொத்த அசிங்கப்பட்டுள்ளார் 24 வயது நடிகை..!!!
இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. மீனாகுமாரியை பொறுத்தவரை, வறுமையில் இருக்கும் மாடல் அழகிகள் என்றால் அதற்கேற்றவாறு டீலிங் பேசுவாராம்.. இதுவே சினிமாவில் நடிக்க விரும்பும் மாடல் அழகிகள் என்றால் அதற்கேற்றவாறு, இந்த தொழிலில் ஈடுபடுத்துவாராம்.. ஆனால், இந்த பெண்களிடம் விபச்சார தொழிலில் ஈடுபட ஒப்பந்தத்தில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டுதான் ஈடுபடுத்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது.. எனினும் இந்த தொழிலை 6 ஆண்டு காலமாக செய்து வருவதால், இவருக்கு பின்னணியில் சில முக்கிய பிரபலங்கள் உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது.. அதனால், இவருக்கு துணையாக இருந்த மற்றவர்கள் பற்றியும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications