சொதப்பும் எக்ஸிட் போல்.. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் 2019 கணிப்புகள் சரியாக இருந்ததா?
மும்பை: சமீப காலமாக எக்ஸிட் போல் (Exit Poll) எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் மீதான நம்பகத்தன்மை நெருக்கடியை சந்தித்திருக்கிறது. இப்படி இருக்கையில் கடந்த 2019 மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் எக்ஸிட் போல் எந்த அளவுக்கு சரியாக இருந்தது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஹரியானா தேர்தல், அதற்கும் முன்னர் நடந்த லோக்சபா தேர்தல் ஆகியவற்றின் போது எக்ஸிட் போல் யாருக்கு வெற்றி என்பதை கணித்திருந்தது. ஆனால், இந்த கணிப்பில் உண்மை இல்லை என்பது முடிவுகள் வெளியான பிறகு தெரிய வந்திருக்கின்றன. அதாவது லோக்சபா தேர்தலில் பெரும்பாலான மீடியாக்கள் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்றும், காங்கிரஸ் வெற்றிக்கு நெருக்கமாக வரும் என்றும் கணித்து எக்ஸிட் போல் வெளியிட்டிருந்தன. ஆனால், முடிவுகளில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்றது.

இது முதல் அடி.. இரண்டாவதாக ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் இந்த முறை ஆட்சி அமைக்கும் என்று மீடியாக்கள் கணித்து கூறியிருந்தன. ஆனால், பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. ஊடகங்களில் கணிப்புக்கு விழுந்த இரண்டாவது அடி இது. இந்த சம்பவங்களுக்கு பிறகு, எக்ஸிட் போல் மீது பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்கையில் இன்று மாலை மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் எக்ஸிட் போல் வெளியாக இருக்கிறது.
கடந்த 2019ம் இதே போல ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை வெளியிட்டிருந்தன. அது எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக இருந்தது என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு பாஜக+சிவசேனா கூட்டணிக்கு 210 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 63 இடங்களும் கிடைக்கும் என்று 'ஏபிபி சி வோட்டர்' கணித்திருந்தது. 'இந்தியா டுடே', பாஜக கூட்டணி 213 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 61 இடங்களையும் ஜெயிக்கும் என்று எழுதியிருந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், வெற்றிப்பெற வேண்டும் எனில் 145 இடங்களில் வெற்றிப்பெற வேண்டும். ஏபிபி மற்றும் இந்தியா டுடே கணித்தலில் ஒரு விஷயம் நடந்து. அதாவது பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
ஆனால் கணிப்புகளின்படி பாஜக கூட்டணி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. அதாவது பாஜக தனியாக 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணியில் இருந்த சிவசேனா 56 தொகுதிகளிலும் என மொத்தமாக சேர்த்து 161 என பெரும்பாண்மைக்கு நெருக்கமாகவே வெற்றி பெற்றிருந்தன. மறுபுறம் காங்கிரஸ் 44 இடங்களிலும் அதன் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் பெற்றி பெற்றன.
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்த வரை 'ஏபிபி சி வோட்டர்' 35 இடங்களில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியும், 32 இடங்களில் பாஜகவும் ஜெயிக்கும் என்று கணித்திருந்தது. மறுபுறம் டைம்ஸ் ஆஃப் இந்தியா, 41 இடங்களை ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியும், 29 இடங்களை பாஜக கூட்டணியும் வெல்லும் என்று கணித்திருந்தது.
இதிலும் ஒரு விஷயம் மட்டுமே சரியாக இருந்தது. அதாவது கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜேஎம்எம் கட்சி தனியாக 30 இடங்களையும், காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 1 என 47 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்றது. மறுபுறம் பாஜக 25 இடங்களில் சுருங்கியது. எப்படி இருப்பினும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் பெரும்பாலும் உண்மைக்கு நெருக்கமாகவே அமைந்திருக்கின்றன.
அந்த வகையில் இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளுக்கு ரெடியாக இருங்கள். ஒன்இந்தியா தமிழில் துல்லியமான அப்டேட்களை பெறுங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications