மும்பையில் மிக மோசமான தீவிபத்து.. தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.. ஷாக்கிங் வீடியோ
மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியான கஞ்சூர்மார்க்கில் உள்ள சாம்சங் சேவை மையத்தில் ஏற்பட்ட அதிபயங்கர தீ விபத்தை அணைக்கும் முயற்சியில் 8 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன
மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்று கஞ்சூர்மார்க். திங்கள்கிழமை மாலை இங்குள்ள சாம்சங் சேவை மையத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீயானது அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவ, அந்த இடம் முழுவதும் கருமையான புகை சூழ்ந்தது.

கட்டுக்கடங்காமல் எரியும் தீ
இந்தத் தீவிபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,

தீயை அணைக்கும் பணிகள்
இது குறித்து டிசிபி பிரசாந்த் கதம் கூறுகையில், "மும்பையின் கஞ்சூர்மார்க் கிழக்கில் உள்ள சாம்சங் சேவை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக இரவு 9 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

தொடர்ந்து நடைபெறுகிறது
10-12 தீயணைப்பு வாகனங்கள் இங்கு உள்ளன. இந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

என்ன காரணம்
இந்தத் தீவிபத்தில் இதுவரை எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் அல்லது யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்தத் தீ விபத்திற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications