மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"குட்டி தமிழ்நாடு".. கொரோனாவை வென்ற "தாராவி".. நேற்று 6 பேருக்கு தொற்று.. மீள்கிறது மும்பை

மும்பையில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் கொரோனாவால் 10,891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... அதேசமயம், மும்பையின் தாராவியில் வெறும் 6 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. நாளுக்கு நாள் மும்பையில் தொற்று குறைந்து வருவது அனைவரையும் உற்றுநோக்க வைத்து வருகிறது.

கடந்த 2 வருஷமாகவே தொற்று இந்தியாவை பீடித்து கொண்டுள்ளது.. அதிலும் இந்த 2வது வைரஸ் பரவல், கடந்த சில மாதங்களாகவே நம்மை கலங்க வைத்து வருகிறது.. இதனால், கடந்த மாதம் வரை, நாட்டில் உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டே இருந்தன..

ஆனால், மத்திய, மாநில அரசுகள் எடுத்த முனைப்பான செயல்களால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.. இந்த முறை போட்ட லாக்டவுனால் ஓரளவு பலனும் கிடைத்து வருகிறது. அதிலும், கடந்த வருடம் வந்த கொரோனாவும் சரி, இப்போது பரவி உள்ள 2வது அலை தொற்றும்சரி, அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துவது மகாராஷ்டிராவில்தான்..!

 தொடர்ந்து சரிவு.. தமிழ்நாட்டில் இன்று 18023 பேருக்கு கொரோனா.. கோவையில் நிலைமை சரியாகிறது! தொடர்ந்து சரிவு.. தமிழ்நாட்டில் இன்று 18023 பேருக்கு கொரோனா.. கோவையில் நிலைமை சரியாகிறது!

லாக்டவுன்

லாக்டவுன்

எனவே, அரசின் தீவிரமான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகிறது.. இபபோது லாக்டவுன் அமலில் உள்ளதால், தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்றுகூட ஒரே நாளில் 10,891 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தொற்றினால் பாதிக்கப்பட்டு 295 பேர் உயிரிழந்துள்ளனர்... இதுவரை 58,52,891 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதுவரை 1,01,172 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

அதேசமயம், நேற்று ஒரேநாளில் 16,577 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. இதுவரை 55,80,925 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்... இப்போதைக்கு 1,67,927 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் இருந்தாலும், மும்பையில் தொற்று விகிதம் குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.

தாராவி

தாராவி

காரணம்... இங்குள்ள தாராவி என்ற பகுதிதான்.. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பையின் இந்த தாராவியானது மிக மிக நெருக்கடியான ஏரியா.. மக்கள் தொகை இந்த பகுதியில் அதிகம்.. வீடுகள் எல்லாமே நெருக்கி நெருக்கி இருக்கும்.. இதனால், சுத்தம், சுகாதாரம் என்பதே இங்கு குறைந்து காணப்படும்.. இதனாலேயே தொற்று அதிகமாகவும் பரவியது.

சவால்

சவால்

மகாராஷ்டிராவை பொறுத்தவரை, அரசுக்கு இந்த தாராவி பகுதிதான் எப்போதுமே பெருத்த சவாலாக இருக்கும்.. ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் இந்த பகுதியில் தொற்று இருந்தது.. ஆனால், புதிதாக வெறும் 6 பேருக்குதான் நோய்த் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது..

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

இதன்மூலம் இந்த பகுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,844ஆக உயர்ந்துள்ளது... இதில் 6,465 பேர் குணமடைந்து வீட்டுக்கு போய்விட்டார்கள்.. மிச்சம் 20 பேர் மட்டும்தான் சிகிச்சையில் உள்ளனர்.. இது எல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம்.. கடந்த மே மாதம் 31-முதல் தினமும் 1 முதல் 3 வரை மட்டுமே கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்திருப்பது கவனிக்கத்தக்கது..!

English summary
Maharashtra mumbai new covid cases death june 8
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X