வெறும் சில நொடிகள்தான்! மகாராஷ்டிராவில் ரயிலில் திடீர் தீ விபத்து.. 5 பெட்டிகளுக்கு மளமளவென பரவிய தீ
மும்பை: மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய ரயில் நெட்வோர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நாட்டின் முக்கிய பகுதிகள் அனைத்துமே ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணங்களின் போது நமது முதல் சாய்ஸாக ரயில்களே இருக்கிறது.

அதேநேரம் நமது நாட்டில் ரயில் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். அதேபோல கடந்த வாரம் பீகாரிலும் ரயில் விபத்து அரங்கேறியது. இப்படி மோசமான ரயில் விபத்துகள் தொடர் கதையாகவே உள்ளது.
ரயில் விபத்து: இதற்கிடையே மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. நாரயன்தோ ரயில் நிலையம் அருகே வந்த போது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. DEMU எனப்படும் டீசல்-எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்ற வகை ரயிலில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம் 3 மணியளவில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இருக்கும் நிலையில், அதில் 5 பெட்டிகளில் தீ பரவியுள்ளது. இருப்பினும், தீ பரவும் முன்னரே அனைவரும் விரைவாக வெளியேறிவிட்டதால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். இதனால் அங்கே ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
தீ விபத்து: அஷ்தி நிலையத்தில் இருந்து மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள அகமது நகர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றர்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறுகையில், "அகமது நகர் மற்றும் நாராயண்பூர் நிலையங்களுக்கு இடையே 8 பெட்டிகள் கொண்ட டிஇஎம்யு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து பெட்டிகள் தீப்பிடித்தன. இருப்பினும், உடனடியாக அனைவரும் ரயிலில் இருந்து இறங்கிவிட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை" என்று அவர்கள் தெரிவித்தனர்.
என்ன காரணம்: இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயை அணைத்து நிலையில், அங்கே ரயில்வே போக்குவரத்தை மீண்டும் வழக்கம் போல ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் தீ பற்றி எரியும் வீடியோக்களும் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயை அணைத்து நிலையில், அங்கே ரயில்வே போக்குவரத்தை மீண்டும் வழக்கம் போல ஆரம்பிக்க தேவையான நடவடிகைக்கள் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் தீ பற்றி எரியும் வீடியோக்களும் இப்போது இணையத்தில் பரவி வருகிரது.












Click it and Unblock the Notifications