Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய வரலாற்றிலேயே நடக்காத ஒன்று! திடீரென பாஜக உடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ்.. இது எப்படி சாத்தியம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: தேசியளவில் நேர் எதிர்க்கட்சிகளாக பாஜகவும் காங்கிரஸும் அரசியல் செய்கிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்குமா எனக் கேட்டால் யாராக இருந்தாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்றே சொல்வார்கள். ஆனால், அப்படி யாருமே எதிர்பார்க்காத ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் சிவசேனாவுக்கு எதிராக பாஜகவும் காங்கிரஸும் கைகோர்த்து இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே வல்லுநர்கள் சொல்வார்கள். அப்படி இந்தியாவில் யாரும் கனவிலும் கூட நினைக்காத இந்தக் கூட்டணி இப்போது அமைந்துள்ளது. பாஜக எந்தவொரு கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் கூட காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்பதே பலரது கருத்தாக இருந்து வந்தது. ஆனால், அந்த நிலை மாறியிருக்கிறது.

For the First time in Indian political scenario BJP has formed alliance with Congress in Maharashtra

பாஜக காங்கிரஸ் கூட்டணி

இரு நேர் எதிர் சித்தாந்தம் கொண்ட இரு பெரும் தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு ஒரு இடத்தில் தான் யாருமே எதிர்பார்க்காத இந்த கூட்டணி அணைந்துள்ளது.

மகாராஷ்டிராவின் அம்பர்நாத் நகராட்சி மன்றத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை ஓரங்கட்ட பாஜக- காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கிறது. இரு தரப்பும் கூட்டணி அமைத்து சிவசேனாவை காலி செய்துவிட்டு அம்பர்நாத் நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேசிய அளவில் 'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை' உருவாக்கும் என முழங்கி வரும் பாஜகவின் இந்த கூட்டணி முடிவு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம்

இந்த கூட்டணி மூலம் பாஜகவின் தேஜஸ்ரீ கரஞ்ஜூலே மேயராக தேர்வானார். அம்பர்நாத் நகராட்சியில் பாஜக 16, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 4 என மொத்தம் 32 கவுன்சிலர்களின் ஆதரவுடன், நகராட்சியில் பெரும்பான்மையைப் பெற்றது. அங்கு மாநிலத்தில் சிவசேனா உடன் கூட்டணியை அமைத்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராகவே காங்கிரஸுடன் பாஜக கைகோர்த்துள்ளது ஷிண்டே தரப்புக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த கூட்டணியால்நஅம்பர்நாத் நகராட்சியில் சிவசேனா பவரை இழந்துள்ளது.

மாறி மாறி விமர்சனம்

இதை பொருந்தாத கூட்டணி என விமர்சித்துள்ள சிவசேனா எம்எல்ஏ பாலாஜி கினிகர், பாஜக துரோகம் செய்துவிட்டதாகச் சாடினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் இல்லாத இந்தியா பற்றிப் பேசிய கட்சி, இப்போது காங்கிரஸுடன் சேர்ந்து மேயர் பதவியைப் பெறுகிறது. இது சிவசேனாவை முதுகில் குத்துவதற்குச் சமம்" என்று கடுமையாகச் சாடினார்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக துணைத் தலைவர் குலாப்ராவ் கரஞ்ஜூலே பாட்டீல் நிராகரித்தார். கடந்த 25 ஆண்டுகளாக ஷிண்டே கட்சி ஊழலில் மூழ்கியிருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அம்பர்நாத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பாஜக எவ்வளவோ முயன்றது என்றும் அதற்கு அவர்கள் தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பாட்டீல் தெரிவித்தார்.

மகாராஷ்டிர அரசியல்

அம்பர்நாத் நகராட்சியில் அமைந்துள்ள இந்த கூட்டணி, அங்கு மாநில அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே அங்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே பாஜக- சிவசேனா இடையே கூட்டணி தொடர்பாக மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸுடன் அமைந்த இந்தக் கூட்டணியும், பாஜக துணைத் தலைவரின் ஊழல் குற்றச்சாட்டுகளும் சிவசேனா தரப்புக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+